இவ்வாண்டின் முதல் ஆறு திங்களில், சீனாவின் மின் உற்பத்தித் திறன் சுமார் மூன்று கோடி கிலோவாட் எட்டும் என்றும், முழு ஆண்டிலும் ஏழு கோடியே 50 லட்சம் கிலோவாட்டுக்கு மேல் மின்சாரம் உற்பத்திச் செய்யப்படும் என்றும் மதிப்பிடப்படுகின்றது. சீன மின்னாற்றல் தொழில் நிறுவன சம்மேளனத்தின் தலைமை செயலாளர் வாங் யுன் கன் அண்மையில் பெய்சிங்கில் இதனை அறிவித்தார். இரண்டாவது காலாண்டில், மின் உற்பத்திச் சாதனம், மின் உற்பத்தி சாதனம் பொருத்தல் திட்டப்பணி ஆகியவை ஒப்படைக்கப்படும் உச்ச நிலையில் நுழையும். மின்னாக்கிகளும் உற்பத்தியின் பேரெழுச்சியில் இறங்கும். அப்போது சீனாவின் மின்னாற்றல் விநியோகம் வலுப்படும். நாட்டின் மிகப் பெரும்பாலான பிரதேசங்களில் கோடைகாலத்திற்கான மின் தேவை, அடிப்படையில் நிறைவேறும் என்றார், அவர். இவ்வாண்டு சீனாவின் மின் வலைப்பின்னலின் மின் அனுப்பு ஆற்றலும் குறிப்பிடத்தக்க அளவில் உயரும் என்று அவர் சொன்னார்.
|