
2 கோடி கிராம மக்களின் குடி நீர் பாதுகாப்பு பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, இவ்வாண்டு சீன அரசு 400 கோடி யுவானை முதலீடு செய்யும் என்று சீன நீர் வள துணை அமைச்சர் Jiao Yong அண்மையில் கூறியுள்ளார். சீன அரசின் திட்டத்தின் படி, அடுத்த 5 ஆண்டுகளுக்குள், விவசாயிகளின் வாழ்க்கை தரத்தையும் உடல் நலத்தையும் உயர்த்த, 10 கோடி கிராம மக்களின் குடி நீர் பாதுகாப்பு பிரச்சினையை சீனா தீர்க்கும். சீனாவின் கிராமங்களில், சுமார் 30 கோடி மக்களின் குடி நீர் பாதுகாப்பின்மை பிரச்சினைகள் நிலவுகின்றன. குடி நீரில் fluorine அளவு வரையறையை தாண்டுவது, humpback மற்றும் teoporosis நோய் ஏற்படுவது, brackish நீர் அருந்துவது, குடி நீருக்கு schistosome அச்சுறுத்தலாக அமைவது ஆகியவை இப்பிரச்சினைகளில் அடங்கும்.
|