• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-06 18:51:36    
பத்து ஆண்டுகளுக்குள் சுற்றுலா வல்லரசாகக்கூடிய சீனா

cri

பத்து ஆண்டுகளுக்குள் சீனா, உலகில் சுற்றுலா வல்லரசாக இருக்கக்கூடும் என்று உலக சுற்றுலா மற்றும் சுற்றுப்பயண கவுன்சில் அண்மையில் வெளியிட்ட புதிய அறிக்கை மதிப்பிடுகின்றது. 2007ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சீனாவின் சுற்றுலாத் துறை ஆண்டுக்கு சராசரியாக 8.7 விழுக்காடு அதிகரிக்கும். சுற்றுலா தேவையில், சீனா, உலகில் மிக விரைவாக வளரும் நாடுகளில் இரண்டாவது இடம்பெறும் என்று அறிக்கை குறிப்படுகின்றது. சீனா, சுற்றுலாத்துறையில் தனது உள்ளார்ந்த ஆற்றலைப் பயன்படுத்தும் பொருட்டு, மேற்கூறிய கவுன்சில், சீனாவுக்கு சில முன்மொழிவுகளை தெரிவித்துள்ளது. சம்பளத்துடன் இரண்டு வார விடுமுறை, சிக்கன செலவுடன் மதுப்பானம் கடை நடத்துவது, சுற்றுலாத்துறையின் உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்புக் கோட்பாட்டினை வலுவாக்குவது முதலியவை, இம்முன்மொழிவுகளில் அடங்கும். புள்ளி விவரங்களின் படி, கடந்த ஆண்டு சுற்றுலா மூலம் சீனாவுக்கு 2920 கோடி அமெரிக்க டாலர் கிடைத்தது. 2004ம் ஆண்டில் இருந்ததை விட, இது, 13 விழுக்காடு அதிகமாகும். தவிரவும், சீனா, ஆசியாவின் முதலாவது பயணி ஏற்றுமதி நாடாகும்.