
இந்த உலகம் வெப்பமடைந்து வருவதற்கு கரியமிலவாயு என்னும் கார்பன் டை ஆக்ஸ்டு காற்று மண்டலத்தில் கலப்பது தான் காரணம் என்று கூறி, வெப்ப வாயுக்களை வெளியேற்றும் பெரிய பெரிய தொழிற்சாலைகளையும் சாலைகளில் புகைக்கும் கார்களையும் சபித்துக் கொண்டிருக்கிறோம்.
இப்போது மீத்தேன் வாயுவாலும் இந்தப் புவி வெப்பமடைகிறது என்று அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மீத்தேன் வாயு காற்று மண்டலத்தில் எவ்வாறு கலக்கிறது தெரியுமா?இந்தக் கொலைபாதகத்தைச் செய்வது தொழிற்சாலைகளோ, கார்களோ அல்ல, நமக்கு வாழ்வளிப்பதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் தாவரங்கள் தான் காரணம்.
காற்று மண்டலத்தில் கலக்கும் மீத்தேன் வாயுவில் மூன்றில் ஒரு பகுதி செடிகளில் மூன்றில் ஒரு பகுதி செடிகளில் இருந்து வெளியேறுகிறது என்று கூறும் ஒரு ஆய்வு கடந்த ஜனவரி 12ம் நாள் வெளியானதும் புவிவானிலை ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஏனென்றால் மீத்தேன் வாயு அடர்த்தி அதிகமாகும் போது, அது கரியமில வாயு போலவே புவிவெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். கடந்த 150 ஆண்டுகளில் காற்று மண்டலத்தில் செறிந்துள்ள மீத்தேன் வாயுவின் அடர்த்தி மும்மடங்கு பெருகி விட்டது. இதற்கு நெல்சாகுபடி அதிகரித்ததே காரணம்.
உயிருள்ள தாவரங்களில் இருந்து, ஒரு ஆண்டுக்கு மகோடி டன்னில் இருந்து 24 கோடி டன் வரை மீத்தேன் வாயு காற்று மண்டலத்தில் கலப்பதாக, மேக்ஸ் பிளாங்க் அணு இயற்பியல் கழகத்தைச் சேர்ந்த பிஃராங்க் கெப்ளர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு அளவிட்டுள்ளது.
ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் தான்—மக்கிய செடிகளில் இருந்து மீத்தேன் வாயு வெளி யேறுவதாக இதுவரை பாடப்புத்தகங்கள் கூறின. ஆனால், இப்போதோ, ஆக்ஸிஜன் உள்ள உயிருள்ள தாவரங்கள் கூட சூரிய ஒளியில் பட்டு, மீத்தேன் வாயுவை உற்பத்தி செய்கின்றன என்று கெப்ளர் கூறுகின்றார்.
பெரிய பெரிய தொழிற்சாலைகளும், வாகனங்களும் தான், சுற்று சூழலுக்கு எதிரி என்று நாம் நினைத்தோம். இப்போது, பயிர்களும் எமனாகிறதே. யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்டம் என்று பதலுகிறீர்களா?
கவலை வேண்டாம். கடந்த 10 ஆண்டுகளில் காற்று மண்டலத்தில் மீத்தேன் வாயு அதிகரிக்கும் விகிதம் குறைந்து விட்டது. இந்த உலகில் மரங்கள் வெட்டப்பட்டு, காடுகளின் பரப்பு குறைவது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மேலும், காற்று மண்டலத்தில் கரியமில வாயுவை மீத்தேன் வாயு குறைவாக உள்ளது.
|