• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-08 17:54:32    
உலகின் பல்வேறு நாடுகளில் காணப்படும் சிறப்பு காவற்துறையினர்

cri

பனிசறுக்கல் காவற்துறையினர்

ஜெர்மனியின் ஹேம்பார்க் நகரில் பனிசறுக்க தெரியாதவர் காவற்துறையில் பணியாற்ற முடியாது என்று விதி வகுக்கப்பட்டுளளது. ஏனெனில் இந்நகரில் ஆறுகள் குறுக்கும் நெடுக்குமாக பாய்ந்தோடுகின்றன. குளிர்காலம் வரும் போதெல்லாம், ஆறுகளில் நீர் உறைந்து பனிக்கட்டியாக மாறுகின்றன. அப்போது காவற்துறையினர் பனிசறுக்கல் காலணியைப் போட்டு, பணியாற்ற வேண்டியுள்ளது. பனிசறுக்கலில் தேர்ச்சி பெறாதவர் இப்பணியை செய்ய முடியவில்லை.

வாடகை காவற்துறையினர்

பிரிட்டனில் காவற்துறை அலுவலை வாடகைக்கு விடும் ஒரு நடைமுறையை லண்டன் காவற்துறை பொது நிலையம் அண்மையில் நடத்த துவங்கியுள்ளது. யாரோ ஒருவர் திருமணத்தின் போது அல்லது விருந்தின் போது தமது புகழை வெளிகாட்ட விரும்பினால், திருமணத்துக்கோ விருந்துக்கோ பாதுகாப்பு அளிக்கும் வகையில், திடக்காத்திரமான காவற்துறையினரை வாடகைக்கு எடுக்கலாம்.

காகித பலகை காவற்துறையினர்

சுவிடன் நாட்டில் களவு போகாமல் தடுக்க, கடைகளின் வாசலில் காகித பலகை காவல் வீரர்கள் பயன்படுவர். உண்மையான காவற்துறையினர் போன்ற இத்தகைய காவற்துறையினர், கடையின் நுழைவாயில் காவல் புரிகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை வழங்கும் பொருட்டு, கையில், இது பறறிய முன் எச்சரிக்கை சுலோகங்கள் எழுதப்பட்டிருக்கிறன.

பெண் காவற்துறையினர்

பிரேசிலின் சாவ்பாலோ நகரில் 35 பெண்கள் அடங்கிய மகளிர் காவல் நிலையம் ஒன்று உண்டு. கணவன் மனைவியை அடிப்பது பற்றிய வழக்குகளைக் கையாள்வது இதன் முக்கிய பணியாகும். மனைவியை அடிக்கும் கணவனுக்கு இரண்டொரு ஆண்டுகள் சிறை கண்டனை விதிக்கும் அதிகாரமும் அதற்கு உண்டு.