• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-08 18:10:09    
முதலீட்டை ஈர்க்கும் தொழில் நிறுவனங்கள்

cri

கடந்த சில ஆண்டுகளில், சீனப்பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சியுடன், ஆண்டு தோறும், பெருமளவு தொழில் நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில், ஒளிமயமான எதிர்காலத்தில் வளர்ச்சி கொண்ட பல தொழில் நிறுவனங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

பெய்ஜிங்கின் சூங் குவான் சுன் அறிவியல் தொழில் நுட்ப மண்டலம், சீனாவின் மிக முக்கிய அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்க மையமாகும். தற்போது, 17 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் இங்கே அமைந்துள்ளன. இதில் பெரும்பாலானவை, ஆரம்ப மற்றும் வளரும் நிலையில் இருக்கின்றன. இம்மண்டலத்தின் தொழில் நிறுவனங்கள், சீனப் பெருநிலப்பகுதியிலுள்ள 50 முன்னணி தொழில் நிறுவனங்களில், 40 விழுக்காடாகியுள்ளன.

எமது செய்தியாளருக்குப் பேட்டி அளித்த இம்மண்டலத்தின் நிர்வாக கமிட்டி துணைத் தலைவர் கோ ஹொங், கடந்த இரு ஆண்டுகளில், இம்மண்டலத்தில், ஆண்டு தோறும் 4000 தொழில் நிறுவனங்கள் நிறுவப்பட்டன. இதில், 100 தொழில் நிறுவனங்களின் ஆண்டு சராசரி விற்பனை வருமானம், 10 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. உயர் வேகத்தில் வளர்ச்சியடைந்த தொழில் நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்துள்ளன என்றார். அவர் மேலும் கூறியதாவது:

கடந்த ஆண்டில், இம்மண்டலத்திலுள்ள 72 தொழில் நிறுவனங்கள், 37 கோடியே 80 லட்சம் அமெரிக்க டாலர் வெளிநாட்டு முதலீட்டைப் பெற்றுள்ளன என்றார் அவர்.

கடந்த சில ஆண்டுகளில், இணையம், செல்லிட தொலைத்தொடர்பு, மென்பொருள் உள்ளிட்ட துறைகள் சீனாவில் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளன. குறிப்பாக, இதில் வேகமாக வளர்ச்சியடையும் தொழில் நிறுவனங்கள் வெளிநாட்டு இடர் முதலீட்டு நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்து, முக்கியமான முதலீட்டு இலக்காக மாறியுள்ளன. மாபெரும் ஆதாயத்தைக் கண்டதால், இந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், சீனச் சந்தையில் நுழைந்து, வளர்ச்சி வாய்ப்புக்கொண்ட தொழில் நிறுவனங்களைக் கண்டறிய முயன்று வருகின்றன.

அமெரிக்காவின் சர்வதேச தரவு குழுமம், 1992ம் ஆண்டில் சீனச் சந்தையில் நுழைந்த பிறகு, சுமார் 150 சீனத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன. இதில் பெரும்பாலானவை, வேகமாக வளரும் தகவல் தொழில் நுட்ப துறையின் தொழில் நிறுவனங்கள். இக்குழுமத்தின் தொழில் நுட்ப புத்தாக்க முதலீட்டு நிதியத்தின் துணைத் தலைவர் லீ சியான் குவாங், எமது செய்தியாளரிடம் கூறியதாவது:

தகவல் தொழில் நுட்பத்துறையில் முக்கியமாக முதலீடு செய்துள்ளோம். இணையம், செல்லிட தொலைத்தொடர்பு சேவை, மென்பொருள், தொலைத்தொடர்பு பற்றிய தொழில் நுட்பம் ஆகியவற்றில் நாங்கள் 90 விழுக்காட்டு நிதியை முதலீடு செய்துள்ளோம் என்றார் அவர்.

சீனாவில் இடர் முதலீட்டின் ஆதாய விகிதம், 40 விழுக்காட்டை எட்டியது. சர்வதேச தரவு குழுமம் அமெரிக்காவில் செய்த முதலீட்டின் பிரதிபலனை விட மிகவும் அதிகமாகும். அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், இக்குழுமம் சீனாவில் சுமார் 50 அல்லது 60 கோடி யுவானை முதலீடு செய்யும் என்று லீ சியான் குவாங் கூறினார்.

தற்போது, சீனாவில் சுமார் 30 சர்வதேச இடர் முதலீட்டு நிறுவனங்கள் உள்ளன. சீனப்பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்த வட்டாரங்களிலும் அறிவியல் தொழில் நுட்ப மண்டலங்களிலும் அவை குழுமி, வளர்ச்சி எதிர்காலமுடைய திட்டப்பணிகளில் முதலீடு செய்து வருகின்றன. சர்வதேச இடர் முதலீட்டு நிறுவனங்கள் கவனம் செலுத்தும் பகுதியாக, சீனா, மாறியுள்ளது.