• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-09 07:53:41    
கா பெய் தியன் பகுதியில் உள்ள ஒரு அங்காடி

 


cri
இந்த சமையல் எண்ணெய் பட்டியில் வேறு ஏதோ மொழி எழுதப்பட்டிருக்கே. இது சீன மொழி இல்லியே!

"ஆமாம். இது கொரியா எழுத்து பக்கத்தில் உள்ள சர்வதேசப் பள்ளி மாணவர்கள் இதை நன்கொடையாக கொடுத்தார்கள். இந்த அரிசி மூட்டையைப் பாருங்க. மாணவர்கள் ஆங்கிலத்திலே கையெழுத்துப் போட்டு கொடுத்திருக்காங்க."

மூதாட்டி லியு சுன்யிங் தமக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு, கவுன்ட்டருக்கு வருகிறார். அங்கே உட்கார்ந்திருக்கும் இரண்டு அட்டைகளைத் திருகிறார். ஒன்று அடையாள அட்டை. அதிலே குடும்பம் பற்றிய அடிப்படைத் தகவலும், அவருடைய மகனின் மூளைக் கோளாறு பற்றிய சிறப்புத் தகவலும் எழுதப்பட்டிருக்கிறது. கவுன்ட்டரில் உட்கார்ந்திருக்கும் பெண் அடையாள அட்டையைச் சரிபார்த்த பிறகு திருப்பிக் கொடுத்து விட்டு, இன்னொரு அட்டையை கணிணியுடன் இணைக்கப்பட்டிருக்கும் மின்காந்தக் கருவியில் சொருகி எடுக்கிறாள். உடனே கணிணித் திரையில் லியு வாங்க விரும்பும் பொருட்களின் விவரமும், அவற்றின் விலைப் பட்டியலும் தெரிகிறது. மவுசை கிளிக் செய்ததும் லியு இதற்கு முன்பு அங்காடிக்கு வந்த போது என்னென்ன பொருட்களை வாங்கியிருக்கிறார் என்ற விவரம் தெரிகிறது. அவருடைய அன்பு அட்டையில் இன்னும் 400 யுவான் மிச்சம் இருக்கிறது. இனி, அடுத்த தடவை வரும் போது 400 யுவான் மதிப்புள்ள பொருட்களை வாங்கலாம். சரி, கொஞ்சம் கூட லாப நோக்கமே இல்லை என்று சொல்லப்படும் இந்த அன்பு விற்பனை அங்காடியில், பொருட்களுக்கு விலை குறிக்க வேண்டுமா? இது பற்றி கடை ஊழியர் Em Jrong இடம் கேட்ட போது.

முதலில் அப்படித்தான் நினைத்தோம். வாடிக்கையாளர்கள் அவர்கள் விரும்பும் பொருள் எதை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்று அனுமதித்தோம். ஆனால் சிலர் தங்களுக்குத் தேவையில்லாத பொருட்களையும் எடுத்துச் சென்றார்கள். அதனால் கையிருப்பில் பொருட்கள் இல்லாமல், அவசரத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் திண்டாடினோம். அப்போதுதான், ஒரு குடும்பம் ஒரு மாதத்தில் 500 யுவான் மதிப்புள்ள பொருட்களைத் தான் வாங்கலாம் என்று வரம்பு வைத்தோம். அதிலும் 40 விழுக்காடு உடைகளுக்கும், 34 விழுக்காடு உணவுப் பொருட்களுக்கும், எஞ்சிய தொகை இதர பொருட்களுக்கும் செலவிடலாம் என்று கட்டுப்பாடு விதித்தோம். எல்லாப் பொருட்களின் சராசரி விலை, அதன் அசல் மதிப்பில் 10 விழுக்காடுதான் உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுங்கன் என்று சொல்லத்தான் பொருளில் விலைச் சீட்டு ஒட்டப்பட்டது.

விலைச் சீட்டு இருப்பதால் வாடிக்கையாளர்கள் பணம் தரத்தேவையில்லை. அடையாள அட்டை காட்டினாலே போதும். இந்தக் கட்டுப்பாடுகளும் கண்டிப்பானவை அல்ல. எப்போது, மே பணத்தை விட, ஏழைகளின் அடிப்படைத் தேவையே முக்கியம் என்ற கொள்கை பின்பற்றப்படுகிறது. இந்த அன்பு விற்பனை அங்காடிக்கு 7 கிட்டங்கிகள் உள்ளன. அவற்றில் நன்கொடையாக வந்த பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தவிர, ஒரு லட்சம் யுவான் ரொக்கம் கையிருப்பு நிதியாக இருக்கிறது. அதுவும் வசதி படைத்தவர்கள் வாரி வழங்கிய நள் கொடைதான். கா பெய் தியன் பகுதியில் கடந்த இரண்டாண்டுகளாக இயங்கி வரும் இந்த அங்காடியில், 400 ஏழைக் குடும்பங்கள் அன்பை வாங்கிச் செல்கின்றன. இந்த ஆண்டிலே இன்னும் சில குடும்பங்களைச்சேர்ப்பதற்காக, உறுப்பினர் அட்டைகள் வினியோகிக்கப்படும். இதற்காக இப்பகுதி குடிமக்கள் குழு ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து, விண்ணப்பங்களைப் பெற்று வருகிறது.

இப்போது சொல்லுங்கள் வறுமையை விரட்ட இந்தப் படை போதுமா?