
இவ்வாண்டின் மே நாள் விடுமுறையில், சீனாவின் வணிகப் பொருள் சந்தையில் விற்பனையும் வாங்குதலும் விறுவிறுப்பாக இருந்தன. 7 நாள் நீடித்த இவ்விடுமுறையில் சமூக நுகர்வுப் பொருளின் சில்லறை விற்பனை மதிப்பு, 27800 கோடி யுவானை எட்டியது. கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட, இது 16 விழுக்காடு அதிகமாகும். இதற்கிடையில், நாட்டின் பெரிய கடைகள் எண்ணற்ற வாடிக்கையாளர்களை வரவேற்றன. தங்கப்பொருட்கள், இலகு வர்த்தக வாகனம் முதலியவை அதிகமாக விற்கப்பட்டன. உணவு, திருமணம் தொடர்புடைய நுகர்வும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. விடுமுறை நாட்களிலான நுகர்வினால், விவசாயிகளின் வருமானமும் கூடுதலாகியது.
|