• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-11 08:26:32    
முழு வெற்றி பெற்ற சீன மேசை பந்து அணி

cri

2000ஆம் ஆண்டு 45வது உலக மேசை பந்து சாம்பியன் பட்ட போட்டி கோலாலம்பூர் நடைபெற்ற பிறகு, குழுப் போட்டிகள் ஆசிய நாடுகளிலே நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் 48வது உலக மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டியின் குழுப் போட்டி ஐரோப்பாவில் நடந்தது. புரேமன் ஆசிய விளையாட்டு வீரர்களின் முக்கிய அரங்காக மாறியது. ஆடவருக்கான குழுப் போட்டிகளின் முதல் நான்கு இடங்களில் ஆசிய நாடுகள் இடங்களைப் பெற்றுள்ளன. 29 ஆண்டுகளுக்குப் பின், உலக மேசை பந்தாட்ட சாம்பியன் பட்டப் போட்டியின் குழுப் போட்டியில் ஆசியா முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளது.

சீன மகளிர் அணி, சீன ஹாங்காங் அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்ற பின், சீன ஆடவர் குழுவும் 3-0 என்ற செட் கணக்கில் கடைசி எதிராளியான தென் கொரிய அணியைத் தோற்கடித்து தொடர்ந்து மூன்றாம் முறையாக ஸ்வீஸ்ரின் கோப்பைத் தட்டியெடுத்து, இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டது. கடந்த ஆண்டு சீனாவின் ஷாங்கை மாநகரில் நடைபெற்ற 48வது உலக மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டியின் தனிப் போட்டிகளில் சீன விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் அனைத்து 5 நிகழ்ச்சிகளிலும் சாம்பியன் பட்டம் பெற்றதால், சீன அணி, 48வது உலக மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டிகளின் அனைத்து 7 கோப்பைகளை பெற்றுள்ளது.

மேசை பந்து போட்டி வரலாற்றில், 1981ஆம் ஆண்டில் 36வது, 1995ஆம் ஆண்டில் 43வது, மற்றும் 2001ஆம் ஆண்டு 46வது உலக மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டிகளில் சீன அணி மூன்று முறையாக அனைத்து சாம்பியன் பட்டங்களை பெற்றிருந்தது. இந்த முறை நான்காவது முறையாகும். முழுமையான தயார் நிலையில் இருப்பதனால், சீன அணியின் ஆடவர் குழு புரெமனில் பல அணிகள் எதிர்த்து போட்டியிடும் இலக்காக இருந்த போதிலும், அது போட்டிகளில் எப்பொழுதும் மேம்பாட்டுடன் இருந்து வந்தது.

பிரிவுக்குள் நடைபெற்ற 5 போட்டிகளிலும் சீன அணி 3-0 என்ற செட் கணக்கில் எதிராளிகளைத் தோற்கடித்து முழு வெற்றியுடன் கால் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதிபெற்றது. பின்னர், சீன அணி மூன்று உறுதியான எதிர்ப்பைச் சந்தித்தது. கால் இறுதிப் போட்டியில் சீன அணி பிரெஞ்சு அணியைச் சந்தித்தது. அரை இறுதிப் போட்டியில் ஜெர்மன் அணியைச் சந்தித்தது, இறுதிப் போட்டியில் தென் கொரிய அணியைச் சந்தித்தது. சீன அணியின் நான்கு வீரர்களும் மிகவும் சிறப்பாக விளையாடினர். அவர்கள் முறையே 3-0,3-1,3-0 என்ற செட் கணக்கில் இந்த மூன்று நாடுகளின் அணியைத் தோற்கடித்து இறுதியில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.