• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-12 09:38:52    
தோமஸ் கோப்பைக்கான பூப்பந்து போட்டி

cri

ஜப்பானில் நடைபெற்ற 24வது தோமஸ் கோப்பைக்கான பூப்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் அதிக மேம்பாட்டைக் கொண்ட சீன அணி டென்மார்க் அணியைத் தோற்கடித்து ஆறாவது முறையாக இந்த கோப்பைத் தட்டியெடுத்தது. இந்த முறையில், சீனாவின் இரண்டாவது இரட்டை விளையாட்டு வீரர்கள் போட்டியில் ஈடுபடுவதற்கு முன்னரே, சீன அணி 3-0 என்ற செட் கணக்கில் டென்மார்க் அணியைத் தோற்கடித்தது.

முந்திய தோமஸ் கோப்பைக்கான பூப்பந்து போட்டிகளில், சீன அணியின் இரட்டை விளையாட்டு வீரர்கள் நீண்டகாலமாக ஒப்பீட்டளவில் பலவீனமாக இருந்தனர். 2002 ஆம் ஆண்டில் சீனாவின் குவாசோவில் நடைபெற்ற 22வது தோமஸ் கோப்பை பூப்பந்து போட்டிகளில், சீன அணி 1-3 என்ற செட் கணக்கில் மலேசிய அணியிடம் தோல்வி கண்டு, அரை இறுதியில் நுழையவில்லை. அப்போது இரண்டு இரட்டையர் போட்டிகளில் தோல்வியுற்றதே முக்கிய காரணம்.

அதற்கு பின்னர், சீன அணி, ஆடவர் இரட்டையர் விளையாட்டில் அதிக ஈடுபாடு செய்து விளையாட்டு வீரர்கள் சிரமப்பட்டு பயிற்சி செய்தனர். இதனால்தான், கடந்த முறை தோமஸ் கோப்பைப் போட்டியில் சீன ஆடவர் இரட்டை விளையாட்டு வீரர்கள் ஒரு செட்டில் வெற்றி பெற்றனர். இந்த முறையில், சீன இரட்டை விளையாட்டு வீரர்களான தை யிங், பு ஹை பெங் ஜோடி மிக சிறப்பாக விளையாடி, உலக பெயர் வரிசையில் முதலிடத்தில் உள்ள டென்மார்க்கின் எலிக்சன், லுன்காட் ஜோடியைத் தோற்கடித்து சீனாவுக்கு ஒரு முக்கிய புள்ளியைப் பெற்று தந்தது.

மிகவும் பாராடத்தக்கது என்ன என்றால், சீனாவின் இரண்டு இளைஞர்கள் நேருக்கடி நிலையில் மிகவும் தெளிந்த சிந்தனையுடன் இருந்து, போர் தந்திரத்தை உரிய நேரத்தில் சரிப்படுத்தி, தாக்குதல் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தி இறுதியில் 2-1 என்று ஆட்டக்கணக்கில் டென்மார்க்கின் இரட்டையர் விளையாட்டு வீரர்களைத் தோற்கடித்து சீன அணிக்கு மதி்ப்புக்குரிய ஒரு புள்ளியைத் தந்தனர். சீன ஒற்றையர் விளையாட்டு வீரர் லின் டான் முதலாவது செட்டில் மிகவும் சிறப்பாக விளையாடி சீனாவின் முழு வெற்றிக்கு அடிப்படை இட்டுள்ளது பாராட்டத்தக்கது.