• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-10 10:46:44    
நேயர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும்

cri

அருப்புக்கோட்டை ஆர். குற்றாலலிங்கம் சின்ன வானொலிக்கு எழுதிய முதல் மடல். கடந்த 10.2.2006ம் நாளன்று குடியிருப்பு நலவாழ்வு சேவை மையம் குறித்த தகவல், உங்கள் குரல் பகுதியில் பெரம்பலூர் நேயர் மற அங்கத்தினரின் பேச்சு, நட்புப்பாலம் ஆகியவற்றை கேட்டு மகிழ்ந்த்தாகவும்.13.2.2006 அன்று கலையரசி, ராஜாராம் பங்கேற்ற சீன மொழி கற்பிக்கும் நிகழ்ச்சி சிறிது நேரம் கேட்க முடிந்தது, இனி தொடர்ந்து கேட்க முயற்சி செய்கிறேன், சீன வானொலியின் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துக்கள் என்று எழுதியுள்ளார்.

வாணி: நேயர் குற்றாலலிங்கம் அவர்களுக்கு நன்றிகளும், வரவேற்பும். தொடர்ந்து நிகழ்ச்சிகளை கேளுங்கள், கருத்துக்களையும் மறக்காமல் எழுதுங்கள். அடுத்து உறையூர் குருமூர்த்தி எழுதியுள்ள கடிதம். ஜனவரி முதல் தேதியன்று நிகழ்ச்சியில் வானொலி நிகழ்ச்சிகள் 387 மணி நேரம், 29 மொழிகள் மற்றும் 4 வட்டார மொழிகளில் ஒலிபரப்பாவதையும், 2005ம் ஆண்டில் 20 லட்சம் கடிதங்கள் பெறப்பட்டதையும் கூறக்கேட்டோம். நல்ல தகவல். நன்றி என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: வளவனூர் நேயர். பி. இளங்கோவன், செய்திகள் நடுநிலைத் தன்மையுடன் இருப்பதை வரவேற்பதாகவும், உலகச் செய்திகளை அதிகப்படுத்தலாம், மாணவர்கள் உள்ளிட்ட பல நேயர்கள் பயன் அடைவார்கள் என்று எழுதியுள்ளார். இது தவிர புதிய நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனைகள் பல எழுதியுள்ளார். பெரம்பலூர் சின்னவளையம் அஞ்சல் நேயர் கு. மாரிமுத்து அவர்கள் 20.2.2006 அன்றைய சீன உணவு அரங்கம் சிகழ்ச்சியில் கோஸ் சுருள் சமோசா தயாரிப்பது சொன்னதைக் கேட்டதே சமைத்து சாப்பிட்டது போல இருந்தது என்றும். இந்த தகவல்கள் பெண் நேயர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் எழுதியுள்ளார்.

வாணி: பெண் நேயர்களுக்கு மட்டுமல்ல ஆண் நேயர்களுக்கும் சமையல் கலை குறிப்புகள் நிச்சயம் பயன் தரும் என்றே நம்புகிறோம். நேயர். இளங்க்கோவன் அவர்களே உங்கள் அலோசனைகளுக்கு நன்றி. வாய்ப்பும் நேரமும் அமையும்போது மாற்றங்களும் சீராக அமையும் என்பது உறுதி.

க்ளீட்டஸ்: தேனி மாவட்டம் கம்பம் லதா மணிகன்டன் 15.2.2006 புதனன்று ஒலிபரப்பான அனைத்து நிகழ்ச்சிகளும் அருமை. கேள்வி பதில் நிகழ்ச்சியில் கடிதங்கள் எப்படி எழுத வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது, நேருக்கு நேர் நிகழ்ச்சியில் திரு. எஸ். செல்வம் பேசியதைக் கேட்டோம் என்று எழுதியுள்ளார். சென்னை மணலி நேயர் எஃப்.எம். பி. மாறன், 27.02.2006 அன்றைய நிகழ்ச்சியில் வாணி, ராஜாராம் இருவரும் கடிதங்களை மிகச் சிறப்பாக தொகுத்து வாசித்தார்கள், நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் தமிழ் பாடல்கள் ஒலிபரப்பாவதைக் கேட்க மகிழ்ச்சி, சீன பாடல் ஒன்றும் கேட்டு மகிழ்ந்தோம். நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு நன்றி என்று எழுதியுள்ளார்.

1.03.2006 அன்றைய மலர்சோலை நிகழ்ச்சியில் கோடை விடுமுறையில் சுற்றிப்பார்க்க பல இடங்களை அறிமுகப்படுத்தினார் லூஸா அம்மையார், கேட்க இனிமையாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.