புதிய புள்ளி விபரங்களின் படி, கடந்த ஆண்டின் இறுதி வரை, சீனாவில் போக்குவரத்துக்கான நெடுஞ்சாலையின் மொத்த நீளம், 19 லட்சத்து 30 ஆயிரம் கிலோமீட்டரை எட்டியுள்ளது. இவற்றில் உயர் வேக நெடுஞ்சாலையின் மொத்த நீளம், 41 ஆயிரம் கிலோமீட்டரை எட்டியுள்ளது. உயர் வேக நெடுஞ்சாலையை முக்கியமாகக் கொண்ட நாட்டின் முதுகெலும்பான நெடுஞ்சாலை வலைபின்னல் பூர்வாங்க முறையில் உருவாயிற்று. இன்று சீன போக்குவரத்து அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் இதை அறிவித்தார். சீனாவின் கிராமங்களில், போக்குவரத்து வசதி பெரிதும் மேம்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இறுதி வரை, 99.8 விழுக்காட்டு வட்டங்கள் மற்றும் பட்டினங்களிலும், 94.5 விழுக்காட்டு கிராமங்களிலும் நெடுஞ்சாலைப் போக்குவரத்து பயன்படுகின்றது என்று அவர் குறிப்பாக சுட்டிக்காட்டினார். இவ்வாண்டு, கிராமங்களில் போக்குவரத்து கட்டுமானத்துக்கான முதலீட்டை சீனா அதிகரித்து, தேசிய இன பிரதேசங்கள், எல்லை பிரதேசங்கள், வறுமை பிரதேசங்கள் மற்றும் தானியம் விளையும் முக்கிய பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் நெடுஞ்சாலை கட்டுமானத்தை மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
|