இவ்வாண்டின் முதல் நான்கு திங்களில், சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு, 51 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. 2005ம் ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட, இது 24 விழுக்காடு அதிகமாகும். சீன சுங்கத்துறையின் தலைமை அலுவலகம் இன்று வெளியிட்ட தரவு இதைக் காட்டுகின்றது. இதற்கிடையில், ஆடை உள்ளிட்ட, சீனாவின் பாரம்பரிய வணிகப் பொருட்களின் ஏற்றுமதி விரைவாக அதிகரித்துள்ளது. இறக்குமதி பொருட்களில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், சோயா அவரை ஆகியவற்றின் இறக்குமதி சிறிய அளவில் அதிகரித்துள்ளது. உந்துவண்டிகளின் இறக்குமதி வலுவான நிலையில் உள்ளது. உருக்குச்சுருள் இறக்குமதி தெளிவாகக் குறைந்துள்ளது என்று சுங்கத்துறையின் புள்ளி விவரம் காட்டுகின்றது.
|