• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-18 19:05:09    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள்

cri

2008 ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கென பாதுகாப்பு கண்காணிப்பு ரோந்துப் பணிகளுக்கான வல்லுநர் குழுக்களுக்காக 200 மில்லியன் யுவானை செய்சிங் அரசு முதலீடு செய்துள்ளதாக பெய்சிங் செய்திகள் கூறுகின்றன. இந்த பாதுகாப்பு கண்காணிப்பு குழுக்களுக்கான ஆட்கள் 70 விழுக்காட்டினர் உள்ளூர்வாசிகளாகவும், 20 விழுக்காட்டினர் முன்னாள் படையினர்களாகவும் 10 விழுக்காட்டினர் வெளியூர்வாசிகளாகவும் தெரிவு செய்யப்படுவார்கள். இதில் இணைபவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதோடு, விபத்துக்களிலான காயமடைதலுக்கு காப்பீடு, சாதனையாளர் விருது முதலிய நலத்திட்டங்களும் அளிக்கப்படும்.

இவர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கப்படுவதோடு, ராணுவரீதியில் நிர்வகிக்கவும் படுவார்கள். பெய்சிங் பொது சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரியான மியோ லின், இந்த பாதுகாப்புக்குழுவின் ஆள்பலம் இவ்வருட இறுதிக்குள்ளாக 30 ஆயிரம் பேரும் 1008ஆம் ஆண்டிற்குள்50 ஆயிரம் பேருமாக ஆக்கப்படும் என்றார். இந்த கண்காணிப்பு ரோந்துக் குழுவினரின் பணிகள், குற்றங்களை தடுப்பது, பாதுகாப்புப் பணிகளில் காவல் துறையினருக்கு உதவுவது, மீட்புப்பணி மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு ஆகியவையாகும்.

உலக ஓட்டப்பந்தய சாம்பியன் ஜஸ்டின் காட்லின் 100மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 9.76 வினாடிகளில் கடந்து புதி சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே உள்ள ஜமைக்கா நாட்டு ஓட்டப்பந்தய வீரர் அசாஃபா பாவெல்லின் உலக சாதனை அளவான 9.77 வினாடிகள் என்பதை 0.01 என்ற வித்தியாசத்தில் முறியடித்துள்ளார் 24 வயது அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் ஜஸ்டின் காட்லின். டோகாவில் நடைபெறும் உலக தடகள விளையாட்டுக் கூட்டமைப்பின் போட்டிகளில் இந்த புதிய சாதனையை ஜஸ்டின் காட்லின் ஏற்படுத்தினார்.

உலக சாதனையை முறியடிப்பதாக ஏற்கனவே கூறியிருந்து ஜாஸ்டின் காட்லின் தனது வார்த்தைகளை தான் செயல்படுத்தியதை நினைவுகூர்ந்து, தன்னால் முடியும் என்று நினைத்தப்படியே தன்னால் முடிந்தது என்றார். தற்போது தானே தலைசிறந்தவன், காரணம், உலக சாம்பியன், ஒலிம்பிக் சாம்பியன் மற்றும் உலக சாதனை படைத்தவன் என்ற பெருமைகள் தன் வசமுண்டு என்கிறார் ஜஸ்டின் காட்லின்.