• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-15 18:19:38    
சீனக் கூரியர் சேவைத் துறையின் வளர்ச்சி

cri

சீன உள்நாட்டு பொருளாதார மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தின் வளர்ச்சியுடன், சீனாவில் கூரியர் சேவைத் துறை, வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது, சீனாவில் சுமார் ஒரு லட்சக்கணக்கான கூரியர் சேவை நிறுவனங்கள் உள்ளன. வெளிநாடுகளின் பெரிய கூரியர் சேவை நிறுவனங்கள் சீனச்சந்தையில் நுழைந்த பிறகு, சீன நிறுவனங்கள் சேவை தரத்தை மேலும் உயர்த்தி, வெளிநாட்டு சக நிறுவனங்களுடனான போட்டியிலும் ஒத்துழைப்பிலும் வளர்ச்சியடைய வேண்டி ஏற்பட்டது.

ஜின் சுன் என்பவர், ஷாங்காய் மாநகரிலுள்ள மேயா என்ற தனியார் கூரியர் சேவைத் நிறுவனத்தின் ஆளுனர். மேயா, ஒரு புதிய நிறுவனம் என்பதால், சர்வதேச கூரியர் சேவைக் குழுமத்துடன் போட்டி இட முடியாது. இதனால், அமெரிக்க-சீன சிறப்பு நெறி கூரியர் சேவையில் ஈடுபடுவதை, ஜின் சுன் உறுதிப்படுத்தினார்.

சீனப்பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சி, சீன-அமெரிக்க வர்த்தகத்தின் அதிகரிப்பு ஆகியவற்றினால், சீன-அமெரிக்க சிறப்பு கூரியர் சேவை வரவேற்கப்பட்டது. இது குறித்து ஜின் சுன் கூறியதாவது:

எடுத்துக்காட்டாக, அமெரிக்காவிலுள்ள எமது வாடிக்கையாளர்கள், அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு தான், பொருட்களை அனுப்ப வேண்டும். பொருட்களைப் பெற்றி பின், நாங்கள் உடனடியாக விமான நிலையத்துக்குச் சென்று அனுப்புவோம். இதனால், வேறு நிறுவனங்களின் கூரியர் சேவையை விட, எமது சிறப்பு நெறி கூரியர் சேவை அரை அல்லது ஒரு நாள் விரைவாக இருக்கிறது. இது, சிறப்பு நெறியின் தனிச்சிறப்பியல்பு. முதல் ஆண்டில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்துள்ளதைக் கண்டறிந்தோம் என்றார் அவர்.

கடந்த 10 ஆண்டுகளில், ஜின் சுன் பொன்ற சீன வணிகர்கள் பலர், கூரியர் சேவைத்துறையில் ஈடுபடுகின்றனர். அரசுசார் கூரியர் சேவை நிறுவனங்களை தவிர, தற்போது, சீனாவில் லட்சக்கணக்கான தனியார் கூரியர் சேவைத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. பத்து லட்சத்துக்குக் கூடுதலானோர் இதில் வேலை செய்கின்றனர். மறு புறம், DHL, FEDEX, UPS, TNT ஆகிய உலகப் புகழ்பெற்ற கூரியர் சேவைத்தொழில் நிறுவனங்கள் சீனச்சந்தையில் அடுத்தடுத்து நுழைந்து, தத்தமது தொடரமைப்பை வளர்த்து வருகின்றன.

சீனக்கூரியர் சேவைச் சந்தையின் மாபெரும் வணிக வாய்ப்பினால், சீனாவின் தனியார் சர்வதேச பின்னணி சேவை குழுமங்களும், அதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளன. தற்போது, சீனக்கூரியர் சேவைச் சந்தையின் அளவு, சுமார் 2000 கோடி யுவானாகும். இது, எதிர்காலத்தில், 25 விழுக்காடு என்ற வேகத்துடன் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

கடந்த நூற்றாண்டின் 80ம் ஆண்டுகளில், சர்வதேச கூரியர் சேவை நிறுவனங்கள் சீனாவில் நுழைந்துள்ளன. அப்போதைய சீனச் சட்டத்தின் படி, வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் சீனாவில் தனியாக முதலீடு செய்ய முடியாது. சீனத்தரப்பு, பெருமளவு பங்குகளைக் கொள்ள வேண்டும். ஆனால், 2005ம் ஆண்டின் டிசம்பர் முதல், இந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்டது. எந்த வெளிநாட்டு கூரியர் சேவை நிறுவனமும் சீனாவில் தனியாக முதலீடு செய்து, வெளிநாட்டு நிர்வாக முறையில் சுதந்திரமாக இயங்கலாம். பாதுகாப்பு கொள்கையின் நீக்கம், சீனாவின் கூரியர் சேவை நிறுவனங்களுக்கு மாபெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

தற்போதைய சீனாவின் கூரியர் சேவை நிறுவனங்கள், சர்வதேச கூரியர் சேவைக்குழுமங்களுடன் போட்டி இடுவதில் மூன்று இடைவெளிகள் நிலகின்றன என்று சீன சர்வதேச பின்னணி சேவை என்னும் பத்திரிகையின் தலைவர் ஹு சாங் சாங் கருதினார். அவர் கூறியதாவது:

ஒன்று, இத்துறை குறிப்பிட்ட அளவில் பக்குவமடைய வேண்டும். இரண்டாவது, நிர்வாகமும் அனுபவங்களும் ஒப்பீட்டளவில் குறைவு. மூன்று, இன்னும் பல முறையற்ற தொழில் நிறுவனங்கள் உள்ளன என்றார் அவர்.

கடந்த ஆண்டு முதல், DHL, FEDEX, UPS உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள், சீனாவில் முதலீடு மற்றும் தொடரமைப்பு கட்டுமானத்தை வலுப்படுத்தி, இச்சுற்றுப் போட்டியில் முன் வாய்ப்பு கிடைக்க பாடுபட்டு வருகின்றன. குறுகியக்காலத்தில் பார்த்தால், சீனாவிலுள்ள பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், இந்த வெளிநாட்டு கூரியர் சேவை நிறுவனங்களின் முக்கிய வாடிக்கையாளராக இருக்கின்றன. உள்நாட்டு கூரியர் சேவையில் ஈடுபடும் சீனக் கூரியர் சேவை நிறுவனங்களுக்கு மாபெரும் பாதிப்பு ஏற்படாது. ஆனால், சேவையின் கருத்து, வழிமுறை, வரையறை, அளவு முதலியவற்றில், சீனாவின் கூரியர் சேவை நிறுவனங்கள் முழுமையாக உயர்வடையாமல் இருந்தால், அவை எதிர் நோக்கும் சந்தை நிர்பந்தமும் அறைகூவலும் மென்மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தனர்.