• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-15 18:24:45    
அஞ்சல் பணியாளராக பணியாற்றும் விலங்குகள்

cri
குரங்கு அஞ்சல்

நைஜீரியாவின் பெக்சா வட்டாரத்தில் குரங்குகள் அஞ்சல் காரர்களாக பயன்படுகின்றன. இந்த வகை குரங்குகளில் தாய் குரங்குகளும் குட்டி குரங்குகளும் எப்போதும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றன. இவற்றை வெவ்வேறான இடங்களுக்கு மக்கள் அனுப்புவார்கள்.

குட்டி குரங்குகள், தாய் குரங்குகளைத் தேடிப்பிடிப்பதற்காக மக்கள், குட்டி குரங்குகளை வெளியே அனுப்புவார்கள். இதன் மூலம், குட்டி குரங்குகள் அஞ்சல் வழியை அறிந்து கொள்ள முடியும். அவற்றுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட பின், கடிதங்களை மூங்கில் கழியில் குட்டி குரங்குகளின் முதுகில் வைப்பார்கள். குட்டி குரங்குகள் தாய் குரங்கு இருக்கும் இடத்துக்கு செல்லும் போது அஞ்சல் கட்டையும் அங்கு கொண்டு போய்ச்சேர்க்கும்.

வாத்து அஞ்சல்

அமெரிக்காவில் வானிலை அறிக்கை மற்றும் அறிவியல் தொழில் நுட்ப தகவல்களை அனுப்பும் பொருட்டு, காட்டு வாத்துக்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற காட்டு வாத்துக்கள், இவற்றை செய்தி நிறுவனங்களு்ககு அனுப்பும். தற்போது, தக்சாஸ் மாநிலத்தின் 20 அஞ்சல் தொகுதிகளில் சுமார் 100 வாத்துக்கள் அஞ்சல் வேலையில் ஈடுபடுகின்றன.

மீன் அஞ்சல்

ஸ்கான்டினேவியா தீபகற்பத்தின் சுற்றுப்புறங்களிலும் வாழும் குடி மக்கள், 1880ம் ஆண்டிலேயே அஞ்சல் கட்டுகளை அனுப்ப ஒரு வகை மீனைப் பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய மீன்களின் பழக்க வழக்கங்கள் மிகவும் ஒழுங்கானவை. அவை, தொகுதி தொகுதியாக நீரிணையின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திச் செல்கின்றன. அங்கு ஓரிரவு தங்கி, மறு நாள் திரும்பிகின்றன. இந்த வழக்கம் மாறுவதில்லை. உள்ளூர் மக்கள் இதைப் பயன்படுத்தி, அதிகாலையில் அஞ்சல் கட்டுகள் அடங்கிய ஒரு சிறிய பையை நீரில் வைப்பார்கள். மீன்கள் இதை தலையால் தாங்கிக்கொண்டு, எதிர் கரைக்கு நீந்தி செல்லும். மறு நாள் எதிர் கரையிலுள்ள அஞ்சல் கட்டுகளைத் திரும்பிக் கொண்டு வரும்.

பூனை அஞ்சல்

பெல்ஜியத்தின் ஒரு அஞ்சல் நிலையத்தில் 30 பூனைகள் அஞ்சல் பணியில் ஈடுபடுகின்றன. அவை, 30 கிலோமீட்டர் தொலைவு வரை போய்வர முடியும். அப்போது மக்களுக்காக அஞ்சல்களை கொண்டு செல்கின்றன. அவை கொண்டு வந்த அஞ்சல்களை மக்கள் பெற்றுக்கொண்ட போது, அவற்றுக்கு ஒரு வேளை மீன் உணவு ஊட்டினால் போதும்.