• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-16 08:35:44    
பெண் தன்மை அழகுபடுவது

cri

ராஜா.....முந்தைய நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் பெண்ணின் உடல் நலப்பாதுகாப்பு பற்றி சொன்னோம். இன்றைய நிகழ்ச்சியில் என்ன உடல் நலப்பாதுகாப்பு பற்றி பேசப் போகின்றோம்?

கலை......ஆமாம். இப்போது மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. உணவு உடை பிரச்சினை தீர்ந்து விட்டது. மக்கள் வாழ்க்கையில் நன்றாக உட்கொள்வதில் அக்கறை செலுத்துவதற்கு பதிலாக தோல், தலைமுடி, உடல் தோற்ற போன்றவற்றின் பெண்கள் மிகவும் அக்கறை செலுத்துகின்றனர்.

ராஜா......பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூட உடல் எடை கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துகின்றார்கள். ஆகவே அழகு என்பது பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கவனம் செலுத்த வேண்டிய அம்சமாகும். இங்கே முகம் அழகுவது என்பது பற்றி கூறுவது மட்டுமல்ல, மனிதனின் பேச்சு, நடை, உடை பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி, கல்வி அறிவு வளர்ச்சி போன்றவையும் அழகு என்பதில் அடங்கும் அல்லவா?

கலை......நீங்கள் சொன்னது மிகவும் சரிதான். இன்றைய நிகழ்ச்சியில் ஆண்களின் ஈர்ப்பு ஆற்றலுக்கு பதிலாக பெண்களின் ஈர்க்கும் திறமை பற்றி பேசலாமா?

ராஜா......சரி. எப்போதுமே பெண்களுக்குத்தான் சலுகை இது தெரிந்த விஷயம் தானே.

கலை.....மிக்க நன்றி. பெண்களின் தோற்றம் மட்டுமே அழகு அல்ல வாழ்க்கையில் அழகை ரசிக்கும் தன்மையும் அதிகரிக்க வேண்டும்.

ராஜா.....எடுத்துக்காட்டாக சொல்லுங்கள்.

கலை.....முதலில் பெண்கள் வெளியே போவதற்கு முன் அல்லது விருந்தினர்களை வரவேற்பதற்கு முன் கண்ணாடியைப் பார்த்து தங்களது தோற்றத்தை சரிசெய்து கொள்கின்றார்கள் அல்லவா?

ராஜா......ஆமாம். அப்போது உதட்டுச் சாயம் பூசுகிறார்கள். தோல் பளபளப்பாக இல்லாவிட்டால் கொஞ்சம் கிரீம் பூசுகிறார்கள்.

கலை.....சரி, இதில் என்னதப்பு?நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது மரியாதையாக தோற்றம் தர வேண்டாமா?எடுப்பாக ஆடை அணிய வேண்டாமா?

ராஜா.....அழகுபடுத்துவது மட்டுமல்ல விருந்தினர்களுக்கும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் மதிப்பு அளிப்பதென்ற இன்னொரு விஷயமும் இதில் இருக்கின்றது.

கலை.....ஆமாம், நிறம், ஆடை வடிவம், கூந்தல் அலங்காரம் ஆகியன மனிதரின் கல்வியறிவைப் பிரதிபலிக்கின்றது.

ராஜா.....ஆடை கூந்தல் போன்ற வெளித் தோற்றத்தில் கவனம் செலுத்துவது தவிர, பேச கூடிய வேகம், முறை, குரல், இயல்பு, நட்பு போன்றவற்றிலும் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும்.

கலை.....ஆமாம். மற்றவர்களுடன் சிரித்துப் பேசுவது நல்லது. உட்கார்வது, நடப்பது, நிற்பது முதலிய உடல் வடிவங்களிலும் அதிகமாக கவனம் செலுத்தினால் உடல் நிலை ஆரோக்கியமாவதற்கும் துணை புரியும்.

ராஜா.....தோற்றத்தை தவிர, வேறு சில தனிப்பட்ட கட்டுப்பாடுகளும் உண்டு.

கலை......நீங்கள் சொல்வதற்கு முன் நான் கொஞ்சம் சொல்லட்டுமா?

ராஜா.....சொல்லுங்கள்.

கலை.....மக்கள் குறிப்பாக பெண்கள் உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் அக்கறை செலுத்துகின்றார்கள். எப்படி எடை கட்டுப்படுத்துவது என்பதில் ஒவ்வொரு பெண்ணுக்கு சொந்த அனுபவம் உண்டு.

ராஜா......நீங்கள் சொன்னது முற்றிலும் உங்கள் அனுபவத்தை விவரியுங்கள்.

கலை.....எனக்கு அவ்வளவு அனுபவம் இல்லை. பொதுவாக இயல்பான எடை இருப்பது நல்லது. ஆனால் அளவுக்கு மீறிய உணவு பொருட்களை வேன்டுமென்றே உட்கொள்ள கூடாது. நிறையப் பழங்கள், காய்கறிகள், பால் தினமும் உட்கொள்ள வேண்டும். ஒரு முட்டை, கொஞ்சம் பருப்பு உணவு பொருள் பல்வகை வைட்டமின் போன்ற சத்துள்ள உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

ராஜா......குறைவான அனுபவம் என்று சொன்னீர்கள். ஆனால் அதிகமான விஷயங்களை பேசுகிறீர்கள். உட்கொள்வது மட்டுமல்ல, உடல் பயிற்சி தோற்ற அழகை கட்டிக்காப்பதற்கு முக்கிய அம்சமாகும். அல்லவா?

கலை.....ஆமாம். வாரத்திற்கு இரண்டு மூன்று முறையாவது முறையான உடல் பயிற்சி செய்ய வேண்டும். நீச்சல், பந்து விளையாட்டு, ஓடுவது நடப்பது, மாடிப்படியில் ஏறுவது போன்ற உடல் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

ராஜா.....உடல் பயிற்கு பதிலாக கடைவீதியில் சுற்றி பொருட்களை வாங்காமல் சும்மா பார்த்து வரலாமே. இது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயம். இல்லையா?

கலை......உண்மைதான். சில சமயங்களில் அதிகமாக வேலை செய்த பின் உடல் களைப்பு ஏற்பட்டால் கடைகளுக்குச் சென்று விற்பனை பொருட்களை கண்டு ரசிக்கும் போது களைப்பு மறைந்து போகிறது.