• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-16 08:50:10    
சுவையான நூடுல்ஸ்

cri

கலை.......வணக்கம் நேயர்களே. இப்போது சீன உணவு அரங்கத்தில் ராஜாராமும் தி. கலையரசியும் மகிழ்ச்சியுடன் உங்களுடன் சேர்ந்து சமையலறை விஷியம் பற்றி விவாதிக்கின்றோம்.

ராஜா.....போன முறை நாம் காய்கறி சுருள், ஆப்பிள் கேக், காய்கறி உருண்டை முதலிய காய்கறி சிற்றிண்டிகளை அறிமுகப்படுத்தினோம். இந்த முறை நாம் நூடுவ்ஸ் சமைப்பது பற்றி சொல்லலாமா?

கலை.....உங்களுக்கு நூடுல்ஸ் பிடிக்குமா?

ராஜா.....பிடிக்கும். ஆகவே நூடுல்ஸ் பற்றி சொன்னால் எனக்கு பயன் தரும்.

கலை.....சரி அப்படி இருந்தால் நான் இன்றுக்கு உங்களுக்கும் நண்பர்களுக்கும் நூடுல்ஸ் சமையல் முறை பற்றி கூறுகின்றேன்.

ராஜா.....கலை. தமிழ் நாட்டிலே நூடுல்ஸ் சமைக்கும் போது வெங்காயம், கேரட், கோஸ் போன்ற காய்கறிகளை சேர்த்து சமைக்க வேண்டும். இங்கே வழக்கம் என்ன?

கலை......தமிழ் நாட்டிலே நூடுல்ஸ் சுவையானது. எனக்கு பிடிக்கும். இன்று அறிமுகப்படுத்துகின்ற நூட்ல் கொஞ்சம் வித்தியாசமானது. பொதுவாக நூடுல்ஸ் கடையில் ரெடிமெட் நூடுல்ஸ் வாங்குவார்கள். இன்றைய உணவு அரங்கத்தில் நாமே கையால் மாவு பிசைந்து நூடுல்ஸ் தயாரித்து சமைக்க வேண்டும்.

ராஜா.....அப்படியா. சீக்கிரமாக எங்களுக்கு சொல்லுங்கள்.

கலை....சொல்கின்றேன். கோதுவை மாவு. கோழி, வெங்காயம், கேரெட், முட்டை கோஸ் பொருட்கள் போதும்.

ராஜா.... இந்த பொருட்கள் தனிதனியாக எவளவு வேண்டும்.

கலை....எத்தனை பேர் உண்ண வேண்டும் என்பதைப் பொறுத்து. பொதுவாக குடும்பத்தில் மூவர் இருக்கிறார்கள். ஆகவே அரை கிலோ கோதுமை மாவு இருந்தால் போதும். வெங்காயம் இரண்டு. கேரட் இரன்டு. முட்டைகோஸ் அரை கிலோ. சுவைக்கு ஏற்ப உப்பு, மிளகுத் தூள், மிளகாய் பொடி, புளிச்சாறு கொஞ்சம்.