• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-17 16:33:54    
தமிழ் மூலம் சீனம் பாடம் 51

cri
வணக்கம்!தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில், மீண்டும் மகிழ்ச்சியுடன் சந்தித்துள்ளோம்.

இன்று நாம் ஏற்கனவே படித்துள்ள, மற்றவரின் கருத்தை அல்லது அனுமதி கேட்பது பற்றிய ஒரு புதிய உரையாடலைப் படிக்கின்றோம்.

இந்த உரையாடல் ஓம்புநருக்கும் விருந்தினருக்குமிடையிலான ஒரு உரையாடலாகும். தமிழ் மூலம் சீனம் என்ற நூலின் 27வது பக்கத்தின் மேல் பகுதியில் கண்டறியப்படலாம்.

WO KE YI JIN LAI MA?

QING JIN!QING JIN!

WO ZUO ZHE ER, XING MA?

BIE KE QI, QING ZUO!

இந்த உரையாடலின் தமிழாக்கம்—

WO KE YI JIN LAI MA?

நான் உள்ளே, வரலாமா?

QING JIN!QING JIN!

வாருங்கள், வாருங்கள்!

WO ZUO ZHE ER, XING MA?

நான் இங்கே உட்காரலாமா?

BIE KE QI, QING ZUO!

தாராளமாக, கூச்சப்பட வேணடாம், உட்காருங்கள்!

இந்த உரையாடலில், WO என்ற நான் என்பது பொருள், KE YI என்றால் முடியும் என்பது பொருள், JIN LAI என்றால் உள்ளே வருவது என்பது பொருள், MA?என்பது ஒரு வினாச் சொல்லாகும். QING JIN என்ற சொல்லின் பொருள், வாருங்கள் என்பதாகும். ZUO என்றால் உட்காருவது என்பது பொருள். BIE என்றால் வேண்டாம், இந்த சொல்லின் பொருள், BU YAO என்ற சொல்லின் பொருளுக்கு சமம்.

KE QI என்றால் கூச்சப்படுவது, தாராளமாக இல்லை என்பது பொருள். QING ZUO உட்காருங்கள் என்பது பொருள்.

இப்பொழுது ஒரு விளக்கம் சொல்லுகின்றேன். முதலாவது வாக்கியமான WO KE YI JIN LAI MA?என்ற வாக்கியத்தைக் கவனமாக பாருங்கள். KE YI என்ற சொல்லும் MA என்ற சொல்லும் பிரிக்கப்பட்டன. அவற்றுக்கிடையில, வினைச்சொல் JIN LAI என்ற சொல் இருக்கின்றது. இது பொன்ற பல வாக்கியங்கள் உண்டு. எடுத்துக் காட்டாக, WO KE YI ZOU MA? WO KE YI ZUO MA? WO KE YI GONG ZUO MA?இந்த வாக்கியங்கள் அனைத்திலும், KE YI என்ற சொல்லுக்குப் பின் ஒரு வினைச்சொல் வரும், வினைச்சொல்லுக்குப் பின் தான் வினா சொல்லான MA வரும். ஆனால், HAO MA? XING MA? ஆகியவற்றில் அவ்வாறு செய்வது கிடையாது. நேயர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த உரையாடலை மீண்டும் ஒருமுறை பாருங்கள்.

WO KE YI JIN LAI MA?

QING JIN!QING JIN!

WO ZUO ZHE ER, XING MA?

BIE KE QI, QING ZUO!

உண்மையில் இன்றைய உரையாடல் அவ்வளவு கஷ்டமில்லை, நீங்கள் பல முறை பயிற்சி செய்தால் விரைவில் கிரகித்துக் கொள்ளலாம். நம்பிக்கை உண்டா?