• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-17 17:17:06    
நேயர்களின் கருத்துக்கள்

cri
வாணி: வணக்கம் நேயர்களே. மீண்டும் உங்கள் அனைவரையும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைய நிகழ்ச்சியின் முதல் கடிதம் பெரம்பலூர் மாவட்டம் உத்திரக்குடி நேயர் கலைவாணன் ராதிகா எழுதியது. ஜனவரி 29 முதல் பிப்ரவரி 3ம் நாள் வரை வசந்த விழா சிறப்பு நிகழ்ச்சியான சீன வானொலியின் 17வது கருத்தரங்கு விழா நிகழ்ச்சிகளை ஆறு பாகங்களைக் கேட்டோம். நேரடியாக இருந்து பார்த்து கேட்பதைவிட வானொலியின் மூலம் கேட்டபோது ஒரு புது பாணியாக இருந்தது. எங்களுக்கு புதுமையாக இருந்தததைவிட நேரில் வராத நேயர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும். சீனப்பயணம் மேற்கொண்ட ஒவ்வொரு நேயரின் கருத்துக்களும் எங்களை சீனாவிற்கே கொண்டு சென்றுவிட்டது என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து திருச்சி, அபினிமங்கலம் நேயர் க.அருண் எழுதிய கடிதம். நமது நிலையம் மாலை 2 மணி நேர சேவையும், மறுநாள் காலை 2 மணி நேரம் சேவையும் வழங்கி வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம். மிக இடைவெளிக்குப் பிறகு நமது நிகழ்ச்சிகள கேட்பதால் நமது நிலையம் 4 மணி நேர தமிழ்ச்சேவை ஆற்றுவது தற்போதுதான் தெரியும். இதற்கென முயற்சி எடுத்த சீன சகோதர ச்கோதரிகள் அனைவருக்கும் நன்றிகள். ஒவ்வொரு வருடமும் பலப்பல புதுமைகளை ஒலிபரப்பில் செயல்படுத்தி வரும் நமது நிலையத்திற்கு பாராட்டுக்கள் என்று எழுதியுள்ளார்.

வாணி: மிக்க மகிழ்ச்சி. அன்பு நேயர்களே நீங்கள் நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்கவேண்டும், கேட்டு பயன்பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இத்தகைய வசதிகள் ஏற்படுத்தியுள்ளோம். நிச்சயம் இவை உங்களுக்கு பயனுடையதாக அமையும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

க்ளீட்டஸ்: ஆம். அடுத்த கடிதத்தை வேலூர் மாவட்டம் இலவம்பாடி தார்வழி நேயர் தார்வழி. பி. முத்து எழுதிய கடிதம். பிப்ரவரி 15ம் நாள் நேயர் நேரம் நிகழ்ச்சி கேட்டேன். இதில் புதிய நேயர்களின் கடிதங்கள் அதிகம் இடம்பெற்றன. புதுப்புது நேயர்கள் நமது சீன வானொலிக்கு அறிமுகமாகி வருவதை அறியும்போது மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது. பாராட்டுக்கள் என எழுதியுள்ளார்.

வாணி: சரியாகச் சொன்னீர்கள் முத்து. புதிய நேயர்கள் அறிமுகமாவது நிச்சயம் மகிழ்ச்சிதரும் விடயம்தான். புதியவர்களை அறிமுகப்படுத்த நமது நேயர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. இனி, அடுத்த கடிதம், சென்னை மணலி நேயர் எஃபெம். பி. மாறன் எழுதியது. பிப்ரவரி 18ம் நாள் இடம்பெற்ற செய்தித் தொகுப்பில் சீனாவில் எய்ட்ஸ் நோய் பற்றியும், சீனாவில் 1985ம் ஆண்டு சீனாவில் எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது, தற்போது 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் நோயுள்ளது என்றும், எய்ட்ஸ் உள்ளவர்களிடம் எப்படி அனுசனையுடன் நடந்துகொள்ளவேண்டும் என்றும் கூறக்கேட்டோம். இவைப் பற்றிய தெரியாத நேயர்களுக்கு இது அரிய தகவலாகும் என்று எழுதியுள்ளார்.