• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-25 11:35:16    
பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகத்தில் 2 புதிய காட்சித் தலங்கள்

cri

பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகத்தில் 2 புதிய காட்சித் தலங்கள் பெய்ச்சிங்கில் பயணம் மேற்கொள்ளும் போது, அரண்மனை அருங்காட்சியகம் அதாவது தடுக்கப்பட்ட நகரைப் பார்வையிடுவது இயல்பே.

15வது நூற்றாண்டில் கட்டப்பட்ட தொன்மை வாய்ந்த இந்த அரண்மனைக் கட்டடங்கள் எப்பொழுதும் சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்த்துவருகின்றன.

ஆனால் இவற்றைப் பார்வையிட வந்த பயணிகள் இவற்றின் ஒரு பகுதியை மட்டும் கண்டுகளித்துள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

இக்கட்டடங்களிலுள்ள அதிக பகுதிகள் முன்பு பயணிகளுக்குத் திறந்துவிடப்படவில்லை. இந்நூற்றாண்டின் துவக்கத்தில் இவற்றைப் பழுதுபார்க்கும் திட்டப்பணியைச் சீன அரசு துவக்கியுள்ளது.

இதற்குச் சுமார் 20 ஆண்டுகள் தேவைப்படும். பழுதுபார்ப்புப் பணி நடந்துமுடிந்ததும், இந்த அரண்மனை அருங்காட்சியகத்தைச் சேர்ந்த புதிய காட்சித் தலங்கள் படிப்படியாகப் பயணிகளுக்குத் திறந்துவிடப்படும்.

பெய்ச்சிங் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அரண்மனை அருங்காட்சியகம், சீனாவின் மிங் மற்றும் சிங் வமிசக் காலப் பேரரசர்கள் முக்கிய சடங்குகளை நடத்தும் இடமாகவும், அன்றாட அரசியல் விவகாரங்களைக் கையாளும் இடமாகவும் அவர்களுடைய வைப்பாட்டிகளின் இல்லமாகவும் திகழ்ந்தன.

7 லட்சத்து 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுடைய இந்தக் கட்டடங்களில் 9000க்கும் அதிகமான மண்டபங்கள் உள்ளன. சீனாவில் மட்டுமல்ல, உலகிலும் கூட, முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ள மிகவும் பெரிய பண்டைக்கால அரண்மைக் கட்டடம் இது.

தொல்பொருள் பாதுகாப்பு காரணமாக, பயணிகள் இக்கட்டடங்களின் முழுவதையும் பார்வையிட முடிவதில்லை. இக்கட்டங்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான இடங்கள், தடுப்பு பகுதிகளென வரையறுக்கப்பட்டுள்ளன.

சுமார் 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவுடைய இத்தடுப்புப் பகுதிகளில் பெரும்பாலான கட்டடங்கள் பழுதுபார்க்கப்படுவது குறைவு அல்லது பழுதுபார்க்கப்படவே இல்லை.

இதனால், இப்பகுதிகள் பயணிகளுக்குத் திறந்துவிடப்படுவதற்கு முன் பெரும் அளவில் பழுதுபார்க்கப்பட வேண்டும். 2002ஆம் ஆண்டு முதல் சீன வரலாற்றில் அளவில் மிகப் பெரிய அரண்மனை அருங்காட்சியகப் பழுதுபார்ப்புப் பணி துவங்கியது.

2008ஆம் ஆண்டு பெய்ச்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறுவதற்கு முன் இந்த அருங்காட்சியகத்திலுள்ள முக்கிய பகுதிகளான தைய்ஹொ மண்டபம், சியெசிங் அரண்மனை, 6 கிழக்கு மற்றும் மேற்கு அரண்மனைகளைப் பழுதுபார்க்கும் பணி நிறைவடைய வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

பழுதுபார்க்கப்பட்ட வூயிங் மண்டபம் கடந்த அக்டோபர் திங்களில் பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டது. பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகத்தில் நுழைந்ததும், இடது புறத்தில் சற்று தூரம் சென்ற பின்னர் வூயிங் மண்டபம் இருக்கிறது.

வூயிங் மண்டபம் என்பது இம்மண்டபத்தின் பெயர் மட்டுமல்ல, இம்மண்டபம் மற்றும் அதனுடன் கூடிய அனைத்து கட்டங்களின் பெயரும் ஆகும். கடந்த காலத்தில் பேரரசர்கள் இம்மண்டபத்தில் வசித்தனர்.

அமைச்சர்களை வரவழைத்துச் சந்தித்துரையாடினர். பின்னர் இவ்விடத்தில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டது. சிங் வமிசக் காலத்தில் தொகுக்கப்பட்ட ஆயிரம் நூல்களில் பெரும்பாலானவை இவ்விடத்தில் அச்சிடப்பட்டன.

பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டுள்ள வூயிங் மண்டபம், அரண்மனை அருங்காட்சியகத்தில் சேமித்துவைக்கப்பட்டுள்ள பண்டை கால நூல்களும் அழகு கை எழுத்துக்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இடமாகும்.

பெய்ச்சிங் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் பயிலும் மேற்படிப்பு மாணவர் வாங்பெய் எமது செய்தியாளரிடம் கூறியதாவது, வூயிங் மண்டபத்தைப் பார்வையிடுவது இதுவே முதல் தடவை. பரவாயில்லை என்று நான் நினைக்கிறேன் என்றார்.