• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-01 19:58:48    
புதிய காட்சித் தலம்

cri

கடந்த சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சியில் பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகத்தில் 2 புதிய காட்சித் தலங்கள் பற்றி அறிமுகப்படுத்தினோம். இது பற்றி ஞாபகத்தில் இருக்கிறதா?இப்போது இது பற்றி தொடர்ந்து கூறுகின்றோம்.

பெய்ச்சிங் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் பயிலும் மேற்படிப்பு மாணவர் வாங்பெய் எமது செய்தியாளரிடம் கூறியதாவது, வூயிங் மண்டபத்தைப் பார்வையிடுவது இதுவே முதல் தடவை. பரவாயில்லை என்று நான் நினைக்கிறேன்.

இங்கு வந்த பிறகு தான் இவற்றை நேரடியாக உணர முடிகிறது. குறிப்பாக, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்தப் பண்டை கால நூல்களைக் காணும் போது, ஒரு பெரிய நூலகத்தில் நுழையும் உணர்வு ஏற்பட்டுள்ளது என்றார்.

முழு அரண்மனை அருங்காட்சியகத்தையும் பழுதுபார்ப்பதற்காக சோதனை முறையில் வூயிங் மண்டபத்தைப் பழுதுபார்க்கும் பணி நடைபெற்றது.

தற்போது இந்த அருங்காட்சியகத்தில் ஏனைய பழுதுபார்ப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த அருங்காட்சியகத்தின் வட கிழக்கு முனையில், முன்னாள் பேரரசர்களின் பொழுதுபோக்கு இடமான ஜியூசின்சாய் மண்டபத்தைப் பழுதுபார்க்கும் பணி விரைவில் நிறைவடையும்.

இம்மண்டபத்தின் பரப்பளவு அதிகமில்லை. சில நூறு சதுர மீட்டர் மட்டுமே. இருப்பினும், அது புகழ்பெற்றது. இம்மண்டபத்தின் உச்சியிலும் அதன் மேற்கு மற்றும் வடக்கு சுவர்களிலும் ஓவியங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

மண்டபத்தின் சுவர்களில் ஓவியங்களை தீட்டுவது சாதாரண விஷயமே. சிங் வமிசக் காலத்தில் அலங்காரம் செய்யும் போது இந்த வழிமுறை அடிக்கடி பயன்படுத்தப்பட்டது.

இந்த ஓவியங்களைப் பார்க்கும் போது அவை சுவர் ஓவியம் போல காட்சியளிக்கின்றன.நேரடியாக ஓவியங்களைத் தீட்டுவதை விட, இவற்றைத் தயாரிப்பதும் மாற்றுவதும் எளிது.

ஆனால், மண்டபத்தின் உச்சியில் ஓவியங்களை ஒட்டுவது, அக்காலத்தில் அரிது. ஐரோப்பாவின் கிறிஸ்தவர் கோயில்களின் உச்சியில் ஓவியங்களை ஒட்டும் வழிமுறையைக் கற்றுக்கொண்டு இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

மேலை நாடுகளின் ஓவியம் தீட்டும் நுட்பத்தைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட பண்டை காலக் கட்டடம், பெய்ச்சிங்கில் இதுவரை ஜியூசின்சாய் மண்டபம் மட்டுமே என்று இம்மண்டபத்தின் பழுதுபார்ப்புப் பணியில் பங்குகொண்டுள்ள பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகத்தின் பணியாளர் சியுவென்சின் அம்மையார் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, இம்மண்டப அலங்காரம், தனிச்சிறப்பு மிக்கது. சீனாவின் பாரம்பரிய கலையில் இதைப் போன்றது இல்லை.

இந்த ஓவியங்களில் உண்மையில் ஐரோப்பிய மணம் கமழுகின்றது. அக்காலத்தில், ஐரோப்பாவின் கிறிஸ்தவக் கோயில்களில் உச்சி ஓவியங்களைச் சாதாரணமாகக் காணலாம்.

இந்த ஓவியங்கள், கட்டடம் மற்றும் மண்டபத்திலுள்ள இதர அலங்காரங்களுடன் சேர்ந்து ஒரு பகுதியாக உருவாகிக் காட்சியளிக்கின்றன.

மக்கள், கோயிலின் தரையில் நின்ற வண்ணம் தலை நிமிர்ந்து மேலே பார்க்கும் போது, தங்களது பார்வை எல்லைக்குள் இல்லாமல், வானம் மற்றும் விண்வெளிக்குச் செல்வது போல உணரலாம் என்றார்.

சீனா, அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட 7 நாடுகளின் நிபுணர்களின் கடந்த ஓராண்டு கால அயரா உழைப்பு மூலம் ஜியூசின்சாய் மண்டபத்தைப் பழுதுபார்க்கும் பணி விரைவில் நிறைவடையும்.

நேயர்கள் வாய்ப்பு இருந்தால் பெய்ச்சிங்கிற்கு வாருங்கள். உங்களை வரவேற்கிறோம்.

இனி, சுற்றுலா பற்றிய தகவல் பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகம், பெய்ச்சிங் சான்ஆன் வீதியின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.

தரைக்கடி ரயில் அல்லது சான்ஆன் வீதிக்குப் போகும் பேருந்து மூலம் சென்றடையலாம். அதன் நுழைவுச் சீட்டு விலை ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 60 ரென்மின்பி யுவான். ஏனைய பருவங்களில் 40 ரென்மின்பி யுவான்.

இந்த அருங்காட்சியகத்தில் பார்வையிடக் கூடிய இடங்கள் அதிகமாக உள்ளன. நீங்கள் அதிக இடங்களைப் பார்வையிட விரும்பினால், காலையிலேயே அங்கு போய்ச்சேர வேண்டும். இல்லாவிட்டால் நேரம் போதாது.

பயணிகளுக்குத் திறந்துவிடப்படும் நேரம்: குளிர் காலத்தில் காலை 8:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை. கோடை காலத்தில் காலை 8:30 மணி முதல் மாலை 5 மணி வரை.