
தாழ்ந்த, நீண்ட பாட்டொலி கேட்டதும், அழுகை ஏற்படுவது போன்ற உணர்வு, நீள்ராகத்தைக் கேட்டவர்களுக்கு ஏற்படும். அவரது பாட்டொலி, புல்வெளியைக் கடந்து செல்கின்றது. வானிலுள்ள மேகம் கூட நகர மறந்து போகின்றது. தரையில் காற்று வீச மறந்து விட்டது. புல்வெளியில் பால் கறந்துக் கொண்டிருக்கும் மங்கையர்கள், தாம் எங்கே இருக்கிறோம் என்பதை மறந்து விட்டனர். அனைத்து ஆத்மாக்களும் பாட்டொலியுடன் ஒன்றில் போய் வருகின்றன. கவிஞர் ஒருவர், நீள்ராகப் பாடகர் பாடியதைக் கேட்ட பின், மேற்கூறிய தம் உணர்வை இவ்வாறு வர்ணிக்கின்றார்.
பாட்டொவி இவ்வளவு ஈர்ப்பு சக்தி வாய்ந்ததற்கு காரணம். மங்கோலிய இன மக்கள், இயற்கை மீது கொண்டுள்ள அன்புணர்வு, வரலாறு பற்றிய கருத்து ஆகியவற்றை நீள்ராகப் பாடலில் இணைத்துள்ளனர் என்பதாகும். பெய்சிங்கிலுள்ள கணிணி நிறுவனத்தின் பணியாளரான Zhong Jun Jie, மங்கோலிய இன நீள்ராகத்தை அறிமுகப்படுத்தும் ஒரு இணையத் தளத்தைத் திறந்து வைத்தார். செய்தியாளரிடம் தாம் நீள்ராகத்தை விரும்பும் காரணம் கூறினார். அவர் கூறியதாவது:

"நகரங்களில் உணர்ந்து கொள்ளும் சூழ்நிலையிலிருந்து நீள்ராகம் வேறுபடுகின்றது. இது, ஆழ்ந்தது. கவலையூட்டுவது, இத்தகைய உணர்ச்சியை, பல இசைகளில் காண முடியாது" என்றார், அவர்.
தமது இணைய தளத்தில் இப்போது ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கின்றனர். சீனப் பெருநிலப் பகுதியின் பல்வேறு இடங்களிலும், ஹாங்காங் தைவான் மற்றும் வெளிநாடுகளிலும் அவர்கள் இருக்கின்றனர். அனைவரும், மங்கோலி நீள்ராகத்தை நேசிப்பவர்கள். பலர், நீள்ராகத்தைக் கற்றுக்கொள்ள சுயமாக மங்கோலிய இன மொழியைக் கற்றுக்கொள்கின்றனர். பிரபலமான ஆசிரியர்களைச் சென்று அவர்களிடம் கற்றுக்கொள்கின்றனர். இத்தகைய உற்சாகம் மனமுருகும் நிலை ஏற்படும் என்று அவர் எடுத்துக்கூறினார்.
|