
தொன்மையான 7 சீன நகரங்களில் ஹாங்சோ ஒன்றாகும். அதற்கு, மிகுந்த பண்பாட்டுப் பின்னணி உண்டு. உலகப் புகழ்பெற்ற சுற்றுலாக் காட்சி நகர் அது.
அங்குள்ள சிஹு ஏரி மையக் காட்சிப் பிரதேசத்தில் மட்டும், 100க்கும் அதிகமான புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன. மனிதர் வசிப்பதற்கு ஏற்ற இடங்களில் ஒன்று ஹாங்சோ. தலை சிறந்த குடியிருப்புப் பிரதேசப் பரிசை அதற்கு ஐ. நா வழங்கியது.

சர்வதேசப் பூங்கா நகரமெனவும் அது தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிஹு ஏரிக் காட்சிப் பிரதேசத்தின் பரப்பளவு 60 சதுர கிலோமீட்டராகும்.
இங்குள்ள எழில் மிக்க ஏரிக் காட்சியும் தொல் பொருள், வரலாற்றுச் சின்னம் ஆகியவையும் ஒன்றிணைந்து, இயற்கை அழகை வெளிப்படுத்தி நிற்கின்றன.

ஹாங்சோ நகரில் தனிச்சிறப்பு வாய்ந்த வீதிகள் அதிக அளவில் உள்ளன. நைன்சென் வீதியானது, பொழுதுபோக்கு வீதியாகும். பான(மது)அகம், தேநீர் அகம், குழம்பி அகம் ஆகியவை இடம்பெற்றுள்ள இவ்வீதி, சீன மற்றும் மேலை நாட்டுப் பண்பாட்டுத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த வீதியாகும். இவ்வீதிக்கு எதிரே, சிஹு ஏரி அமைந்துள்ளது.
|