சீனாவில் யாங் சு ஆற்று மூ மலை பள்ளத்தாக்கு அணைக்கட்டின் இறுதி பகுதி கட்டுமானம் இன்று நிறைவேறியதுடன், மூ மலை பள்ளத்தாக்கு திட்டப்பணியின் மைய மூ மலை பள்ளத்தாக்கு அணைக்கட்டின் முதுகெலும்பு திட்டப்பணி அனைத்தும் நிறைவேற்றப்பட்டது. இத்திட்டப்பணி, மத்திய சீனாவின் Hu Bei மாநிலத்தின் Yi Chang நகரில் அமைந்துள்ளது. இது உலகில், அளவில் மிகப் பெரிய நீர் சேமிப்பு மையத்திட்டப்பணியாகும். வெள்ளப்பெருக்கு தடுப்பு, மின்சாரம் உற்பத்தி, கடல் போக்குவரத்தை மேம்படுத்துவது முதலிய செயல்பாடுகளை உடையது. 185 மீட்டர் உயரமும் 2300 மீட்டர் நீளமும் உடைய இவ்வணைக்கட்டு, உலகில் அளவில் மிகப் பெரியது.
சீன பொறியியல் கழக உறுப்பினரும், மூ மலை பள்ளத்தாக்கு திட்டப்பணி சோதனை நிபுணர் குழுவின் தலைவருமான Pan Jia Zheng பேசுகையில், மூ மலை பள்ளத்தாக்கு அணைக்கட்டு, தரமான பாதுகாப்பான அணைக்கட்டாகும் என்று கூறினார்.
|