• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-23 16:37:24    
அழகுபடுவதற்கு தேவையான் இடயங்கள்

cri

ராஜா....உடற்பயிற்சி தவிர, பேஷன் இதழ்களை படிக்க வேண்டும். இது திங்களுக்கு 3 அல்லது 5 முறையாக படிக்க வேண்டும். அக்கறை இல்லாவிட்டாலும் வற்புறுத்தி படிக்க வேண்டும்.

கலை.....இது நல்லது. பெண்கள் குறிப்பாக இப்படியே செய்ய வேண்டும். பத்திரிகை மற்றும் புத்தக விற்பனை கடை, மதுவகம்,தேனீர் கடை போன்ற இடங்களுக்குச் சென்று பேஃஷன் தகவலை தேடி பிடித்து சமூக மாற்ற வாழ்க்கையுடன் இணைந்து சொந்த உணர்வை முன்னேறிய சமூகத்துடன் இணைப்பது பெண்களுக்கு தேவை.

ராஜா...உடற்பயிற்சி, கடை வீதிகளில் சுற்றுதல், பத்திரிக்கை புத்தகம் இதழ் ஆகியவற்றை படிப்பது ஆகியவை பற்றி குறிப்பிட்டோம். வேறு துறைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டுமா?

கலை......பல விளயங்கள் பற்றி நாம் குறிப்பிட்டோம். ஆனால் இங்கே ஒருவிஷயம் மறந்து விட்டோம். குடும்பத்தினருடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடுவது மறக்க கூடாது. குடும்பத்தினருடன் இணைந்து அவர்களின் இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். மாதத்துக்கு 10க்கும் அதிகமான நெருங்கிய நண்பர்களை அழைத்து உபசரித்தால் மேலும் உணர்வூக்கம் அதிகரிக்கும்.

ராஜா.....இந்த நட்பு தொடர்பு மூலம் நேர்மை, அன்புணர்வு, நன்றியுணர்வு அதிகரிக்க முடியும். அமைதியான உணர்வுடன் மற்றவருடன் பழகினால் மற்றவரிடமிருந்து அன்பையும் பெற முடியும் அல்லவா?

கலை.......இன்று நாம் பெண்களின் அழகு பற்றி அதிகமாக பேசினோம். போதுமா?

ராஜா.....இது வரை நாம் அறிந்தவை பற்றி குறிப்பிட்டுள்ளோம். அடுத்த முறை வேறு தகவல்கள் கிடைத்தால் நாம் மீண்டும் இந்த தலைப்பு பற்றி விவாதிக்கலாம்.