• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-23 16:37:24    
எப்படி தரமான தூக்கம் நிலைநிறுத்துவது

cri

எப்படி தரமான தூக்கம் நிலைநிறுத்துவது என்பது பற்றி உங்களுக்கு சில யோசனைகள் தருகின்றேன். ஒரு நாளுக்கு 5 அல்லது 6 மணி நேரம் தூங்கி ஞாயிற்று கிழமையில் 10 மணி நேரம் தூங்கலாமே என்று கருதுவது தப்புதான். நாள்தோறும் போதிய அளவு தாங்க வேண்டும். தூங்கும் போது தலையை தெற்கு அல்லது வடக்கு திசையில் வைத்து தூங்கினால் மனிதரின் உடம்பில் யின் யான் ரத்த ஓட்டம் பூமி தெற்கிலிருந்து வடக்கை நோக்கி சுற்றி அலைவதுடன் இயங்கும் போது உடம்பின் பாகங்கள் சரிபடுத்தப்பட்டு திறமை அதிகரிக்கும். படுக்கையில் படுத்துக் கொண்டே சிந்திப்பதென்ற வழக்கம் பலருக்கு உண்டு. இது நல்ல வழக்கமா? இல்லை என்று நான் இங்கே உறுதிப்பட தெரிவிக்கின்றேன். படுக்கை என்பது தூங்குவதற்கான சாதனம் மட்டுமே. ஆகவே, உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் தூக்குவதற்கு முன் 15 நிமிடம் மேசையின் முன்னால் உட்கார்ந்து சிந்தித்து தீர்க்கும் வழி முறைகளைப் பற்றி யோசிக்கலாம். படுக்கையில் சாய்ந்த பின் பிரச்சினைகளைப் பற்றி சிந்திக்க கூடாது. படுக்கையில் சாய்ந்த பின்னும் தூக்கம் வரவில்லை என்றால் சிலர் எண்களை எண்ணுங்கள் என்று சிலர் யோசனை கூறுகின்றனர்.

 இது சரியா? இல்லையா? என்று பலர் கேட்கின்றனார்கள். இங்கே தப்பு என்று தெளிவாக சொல்கின்றேன். ஏனென்றால் எண்களை எண்ணும் போது உங்கள் மூளை மேலும் சுறுசுறுப்பாடையும். இதன் விளைவு மேலும் கஷ்டமாகி தூங்க முடியாமல் போகிறது. நல்ல அயர்ந்த தூக்கம் கிடைக்காவிட்டால் மேலும் கூடுதலான நேரம் படுத்திருங்கள் என்று சிலர் அறிவுரை கூறுவார்கள். இது சரியில்லை. படுக்கையில் இருக்கும் நேரத்திற்கும் தூங்கும் பயனுக்குமிடையில் தொடர்பு உண்டு. தூக்கம் கலைந்து விட்டால் படுக்கையில் படுத்திருக்கத் தேவையில்லை. தூக்க உணர்வு வந்த பின் படுக்கைக்கு போய் தூங்கினால் விரைவில் தூங்க முடியும்.