ராஜா......எனக்கு புரிந்தது. நான் மீண்டு சொல்லட்டுமா?
கலை.....சொல்லுங்கள்.
ராஜா..... அரை கிலோ கோதுமை மாவு இருந்தால் போதும். வெங்காயம் இரண்டு. கேரட் இரன்டு. முட்டைகோஸ் அரை கிலோ. சுவைக்கு ஏற்ப உப்பு, மிளகுத் தூள், மிளகாய் பொடி, புளிச்சாறு கொஞ்சம். இவ்வளவு தான். போதுமா?
கலை..... போதும்.
ராஜா....இப்போது நூடுல்ஸ் சமைப்பது பற்றி சொல்லுங்கள்.
கலை....சொல்கின்றேன். முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் கோதுமை மாவு போட்டு, லேசான சூடாக உள்ள வென்னீரில் உப்பு கலந்து அந்த வென்னீரை கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவில் ஊற்றியபடியே கிண்ட வேண்டும். சூடு அதிகமான நீர் என்றால் மாவு வெந்து விடும். மாவு நன்கு கட்டியானதும் மெல்லிய துணியால் மூட வேண்டும்.
ராஜா....துணி போடுவது எதற்காக?
கலை.....மாவு உலராமல் தடுப்பதற்காக.
ராஜா... சரி. தொடர்ந்து சொல்லுங்கள்.
கலை.....இதற்கிடையில் வெங்காயம், கேரட், முட்டைக் கோஸ் ஆகியவற்றை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். சிறிய சிறிய துண்டுகளாக நாறுக்க வேண்டும். நூடுல்ஸ் போல காய்கறிகள் நீளம்நீளமாக நறுக்க வேண்டும். அசைவப் பிரியர்களுக்கு கோழிக் கறி துண்டுகளை நறுக்கி தயாராக வைக்க லாம். சைவம் விரும்புகிறவர்களுக்கு இது தேவையில்லை..
ராஜா....கெட்டியான மாவை இனி என்ன செய்ய வேண்டும்?
கலை......இப்போது மீண்டும் மாவை மீண்டும் நன்றாக பிசைந்து விரல் அகலத்திற்கு நறுக்க வேண்டும். பின் விரல்களால் நூடுல்ஸ்களை பிரிக்க வேண்டும். அப்புறம், விரல்களால் பிரித்து பிடிக்கப்ப்டடுள்ள நூடுல்ஸ் சிறுசிறுத் துண்டுகளாக வெட்ட வேண்டும். இப்போது மாவு நூடுல்ஸ் துண்டுகளை கொதி நீரில் போட்டு 80 விழுக்காடு வேக விட வேண்டும். சில சமயங்களில் தீயை குறைக்காமல் நூடுல்ஸ் துண்டுகள் வேகவைக்கபட்டால் பரவையில்லை. நூடுல்ஸ் துளிகளை தட்டில் பரப்பி கொஞ்சம் நல்லெண்ணெய் மேலே விட வேண்டும். இது நூடுல்ஸ்களை தனித்தனியாக பிரிப்பதற்கு துணை புரியும்
ராஜா.....இப்போது சாப்பிடலமா?
கலை.....இல்லை. வாணலியில் உணவு எண்ணெய் விட்டு எண்ணெய் சூடாக இருக்கும் போது மிளகாய் உள்ளே போட வேண்டும். நல்ல வாசனை வந்ததும் வெங்காயம், முட்டைக் கோஸ் கேரட் ஆகிய காய்களை போட்டுவதக்க வேண்டும். பக்குவமடைந்த பின் நூடுல்ஸ் துண்டுகளை உள்ளே போட்டு கிளற வேண்டும். வாசனை வீசும் போது வெளியே எடுத்து தட்டில் போட்டு சாப்பிடுங்கள்.
ராஜா.....கேட்பதற்கு தமிழ் நாட்டு நூடுல்ஸ் போல இருக்கின்றது.
கலை.....ஆமாம். பொறித்த நூடுல்ஸ் இப்படிதான் எளிதானது. விடுமுறை நாளில் பொழுக்கு போக்காக நீங்கள் வீட்டில் சமைத்து சுவை பாருங்கள்.
ராஜா ....கண்டிப்பாக. நேயர்களே எங்கள் நூடுல்ஸ் அறிமுகத்தை கேட்ட பின் பயிற்சி செய்யுங்கள். எப்படி இருந்தது என்று ஒரு வரி எழுதுங்கள்.
|