
இவ்வாண்டின் ஏப்ரல் திங்கள் இறுதி வரை, சீனா முழுவதிலும் செல்லிடப்பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 41 கோடியே 60 லட்சத்தை தாண்டியுள்ளது. ஒவ்வொரு நூறு பேரில் சராசரியாக 30 பேர், செல்லிடப்பேசியை பயன்படுத்துகின்றனர். சீன தகவல் தொழில் அமைச்சகம் இன்று வெளியிட்ட தரவு இதை காட்டுகின்றது. செல்லிடப்பேசி மற்றும் செய்தித்தொடர்பு தொழிலின் வளர்ச்சியுடன், சீனாவில் செல்லிடப்பேசி மூலம் அனுப்பும் குறுகிய தகவல்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்துள்ளது. இவ்வாண்டின் முதல் நான்கு திங்களில், நாடு முழுவதிலும் செல்லிடப்பேசி மூலம் அனுப்பும் குறுகிய தகவல்களின் எண்ணிக்கை 13 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது. இது, 2005ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட சுமார் 50 விழுக்காடு அதிகமாகும் என்று தரவு காட்டுகின்றது.
|