
மே 21ம் நாளான இன்று, சீனாவின் 16வது தேசிய ஊனமுற்றோர் உதவி நாளாகும். இருபதாயிரத்துக்கும் அதிகமான சீன வறிய கைகால் ஊனமுற்றோருக்கு உலக சக்கர நாற்காலி நிதியத்தின் முதலீட்டுடன் சக்கர நாற்காலிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. 2000ம் ஆண்டு உலக சக்கர நாற்காலி நிதியம் நிறுவப்பட்டது முதல், திங்கள்தோறும் தேவைப்படும் குழந்தைகள், இளைஞர்கள், வயது வந்தவர்கள் ஆகியோருக்கு பத்தாயிரம் சக்கர நாற்காலிகள் அளித்துள்ளது. இது வரை சீன ஊனமுற்றோருக்கு இந்நிதியம், ஒரு லட்சத்து 20 ஆயிரம் சக்கர நாற்காலிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. தற்போது, சீனாவில் 6 கோடிக்கு மேலான ஊனமுற்றோர்கள் இருக்கின்றனர். 80 லட்சத்துக்கும் அதிகமானோர், கைகால்களில் ஊனப்பட்டவர்களாவர்.
|