
Huang Shanயில் பார்வை சோதனை மேற்கொண்ட அன்னானும் அவரின் மனைவியும்
உலக இயற்கை மற்றும் பண்பாட்டு மரபு செல்வங்களைப் பாதுகாப்பதில் சீன அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை ஐ.நா தலைமைச்செயலாளர் அன்னான் வெகுவாக பாராட்டினார். சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள அவர் இன்று, சீன Anhui மாநிலத்தின் Huang Shan இயற்கை காட்சி மண்டலத்திலும், Wan Nanயில் உள்ள Xi Di கிராமத்திலும் பார்வை சோதனை மேற்கொண்ட போது இவ்வாறு கூறினார். Huang Shan இயற்கை காட்சி மண்டலத்தையும் Xi Di கிராமத்தில் உள்ள பண்டைய குடியிருப்பிடங்களையும் பாதுகாப்பதில் உள்ளூர் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அன்னான் உணர்வுபூர்வமாக சோதனையிட்டு கேட்டறிந்தார். இந்த இரண்டு காட்சி மண்டலங்களிலான சிறந்த உயிரின வாழ்க்கை சூழலுக்கு அவர் மிகவும் மனநிறைவு அடைகின்றார். பல்லாண்டுகளில் உலக மரபு செல்வங்களை மதிப்பிட்டு தேர்ந்தெடுப்பதிலும் இவற்றை பாதுகாப்பதிலும் சீன அரசு மேற்கொண்டுள்ள பணிகளை அவர் பாராட்டினார். சீன அரசின் அழைப்பை ஏற்று, மே 19ஆம் நாள் அவர் பெய்ஜிங் வந்தடைந்து, சீனாவில் 5 நாள் அதிகாரப்பூர்வ பயணத்தைத் துவக்கினார்.
|