
எகிப்தில்
மகளிர் பொது இடங்களில் கையில்லாத ஆடைகளையும் சட்டைகளையும் அணிய மாட்டார்கள். எகிப்து மக்கள் விருந்போம்பல் பண்பு மிக்கவர்கள். அவர்கள் தாராள மனப்பான்மையுடையவர்கள். எஜமானர்களின் பொருட்களை அல்லது ஆடைகளை ஒருவர் பாராட்டினால், அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடுவார்கள். ஆகையால் எகிப்துக்குச் சென்றால் அவர்களின் பொருட்களை பாராட்டுவதில் மிகமிக கவனமாக இருக்க வேண்டும்.
துனிசியாவில்
கிழக்கு பகுதியில் விருந்தினர்கள் வரும் போது விருந்துக்கு பின், அவர்களை முகம் கழுவுவதற்காக விருந்துகொடுப்பவர் ஆற்றங்கரைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அப்போது அவர்கள் தூய்மையான ஆற்று நீரை விருந்தினர் முகங்களை நோக்கி தெளிக்கப்படும். அப்போது நீங்கள் எவ்விதத்திலும் கோபப்படாமல், மாறாக அவர்களுக்கு நன்றி கூற வேண்டும்.

வட ஆப்பிரிக்காவில்
சஹாமிக்காராவைச் சேர்ந்த துயாரக் இனத்தவர், விருந்தினர்களை உபசரிக்கும் போது, முதன்முதலாக விருந்தினர்களுக்கு மூன்று கோப்பை தேநீர் பரிமாறுவார்கள். பின்னர், சபைப்பார்கள். இந்த மூன்று கோப்பை தேநீரை குடிக்க முடியா விட்டால் முதலாவது கோப்பை தேநீரை குடிக்கும் போதே நன்றியுடன் மறுத்தால் மிக நல்லது. இல்லாவிட்டால், ஒரு கோப்பை நீரை மட்டும் அருந்தினால், அவமதிப்பு என்று பொருள். விருந்தினர்களை வரவேற்கும் போது, 3 கோப்பை தேநீர் மட்டுமே தருவார்கள். ஒரே வேளையில் 4, 5 கோப்பை தேநீர் பரிமாறினால், நீங்கள் உடனே வெளியேறிவிட வேண்டும்.

நைஜீரியாவில்
கிழக்கு பகுதியில் வாழும் ஈத் இனத்தவர் விருந்தினர்களை உபசரிக்கும் போது, கோரா என்னும் ஒரு வகை பழத்தை பரிமாறுவது வழக்கம். விருந்து தருபவர் உடனடியாக இதைக் கொண்டு வந்தால், விருந்தினர்களுக்கு உளமார்ந்த வரவேற்பு என்று பொருள். அவர்கள் தாமதமாக கொண்டு வந்தால் விருந்தினர்களை வரவேற்பதில்லை என்று பொருள். அப்போது விருந்தினர்கள் உடனடியாக அங்கிலிருந்து வெளியேற வேண்டும்.
தான்சானியாவில்
வடக்கு பகுதியின் மசாயி புல்வெளியில் மசாயி இன மக்கள் வாழ்கிறார்கள். அவர்களிடையே ஒரு வேடிக்கையான பழக்கம் உண்டு. அதாவது, பெண்கள் தலைமுடி வெட்ட வேண்டும். ஆண்களோ தலைமுடி வளர்க்க வேண்டும். ஆண்கள் இளஞ் சிவப்பு நிற பின்னல் பின்னுவார்கள். பெண்களோ மொட்டையடித்துக் கொள்வார்கள். அது மட்டுமல்ல, அவர்களுடைய அணிகலன்களும் விசித்திரமானவை. ஆண்களும் பெண்களும் பெரிய காதணிகளை போடுவார்கள். பெண்களின் கழுத்தில் பல் வண்ணமுடைய முத்து மாலைகளை போடுவார்கள். ஆண்களும் பெண்களும் ஒரு பெரிய வெள்ளை நிற துணியை ஆடையாக பயன்படுத்துவர். இது பகலில் ஆடையாகவும் இரவில் போர்வையாகவும் பயன்படும்.
|