இந்த வேகமாக வளர்ச்சியடைந்த தொழில் நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதோடு, சீனாவின் முதலீட்டாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. இன்பொஃதேச் என்னும் முதலீட்டுத் தொழில் நிறுவனம், ஈராயிராம் ஆண்டில் நிறுவப்பட்டது. மின்னணு IC அட்டை, மென்பொருள் உள்ளிட்ட தகவல் தொழில் நுட்பத்துறையில் இந்நிறுவனம் கவனம் செலுத்தியது.
கடந்த ஆண்டின் இறுதியில், அமெரிக்க நாஸ்தாக் பங்கு சந்தையில் நுழைந்த சூங் சிங் மின்னணு தொழில் நிறுவனத்தில் இன்பொஃதேச் முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனம் ஆராய்ந்து தயாரித்த டிஜிட்டல் சிலிக்கன் சில்லு, ஈராயிரத்து நான்காம் ஆண்டின் சீன தேசிய அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்தின் முதலாவது பரிசைப் பெற்றது. இந்நிறுவனம், 1999ம் ஆண்டில் நிறுவப்பட்டதன் பிறகு, அதன் உற்பத்தி பொருட்கள் உலக சந்தையில் இடம்பெற்ற விகிதம், எழுப்பது விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.
தற்போது, தகவல் தொழில் நுட்பத் துறையை தவிர, வேறு முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிய, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இடர் முதலீட்டு நிறுவனங்கள் பாடுபட்டு, முதலீட்டுத் திட்டத்தைத் திருத்தி வருகின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் சர்வதேச தரவு குழுமம், தகவல் தொழில் நுட்பத் துறையில் தொடர்ந்து முதலீடு செய்வதோடு, கடந்த இரு ஆண்டுகளில், பொழுதுப்போக்கு முதலிய துறைகளில் முதலீடு செய்து வருகிறது. இன்பொஃதேச் முதலீட்டுத் தொழில் நிறுவனம், புதிய எரியாற்றல், புதிய மூலப்பொருள், உயிரின மருத்துவம் உள்ளிட்ட திட்டப்பணிகளில் கவனம் செலுத்தியது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சீனத்தொழில் நிறுவனங்களில் கவனம் செலுத்துவதுடன், சீனாவின் சில புதிய தொழில் நுட்ப மண்டலங்கள், மேலும் கூடுதலான இடர் முதலீட்டை ஈர்க்க பாடுபட்டு வருகின்றன. இது குறித்து கோ ஹொங் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளில், சூங் குவான் சுன் அறிவியல் தொழில் நுட்ப மண்டலம், பல நடவடிக்கை மேற்கொண்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இடர் முதலீட்டாளருக்கு சீரான முதலீட்டு சூழ்நிலையை உருவாக்க முயற்சி செய்துள்ளது. திட்டப்பணி முதலீட்டு வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்துவது, முதலீட்டு வழிக்காட்டு நிதியத்தை நிறுவுவது முதலியவை இதில் இடம்பெறுகின்றன.
அவர் மேலும் கூறியதாவது:
முதலீட்டு வழிக்காட்டு நிதியத்தை நிறுவுவது, அதாவது, விறுவிறுப்பான முதலீட்டு நிறுவனங்களுடன் ஒத்துழைத்து, குறிப்பிட்ட விகிதாசாரத்தில் முதலீடு செய்கிறது. தவிர, புதுப்பிக்கும் முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கையை வெளியிட்டு, இடர் புதுப்பிக்கும் முதலீட்டுத் தொழில் நிறுவனத்துக்கு, உதவி தொகையை வழங்கி, மண்டலத்திலுள்ள புதுப்பிக்கும் துவக்கத்தில் இருந்த தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்றார் கோ ஹொங்.
பெய்ஜிங்கின் சூங் குவான் சுன் அறிவியல் தொழில் நுட்ப மண்டலத்தைப் போல, ஷாங்காய்யின் உயர் அறிவியல் தொழில் நுட்ப மண்டலம், வளர்ச்சிக் கட்டுமானத்தில், இடர் முதலீட்டு வழியை விவாதித்து, பேரிடர் முதலீட்டு உணர்வை வலுப்படுத்தி, இடர் முதலீட்டுச் சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. இடர் முதலீட்டை ஆக்கப்பூர்வமாக உட்புகுத்தியதுடன், நாட்டின் நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் புதுப்பிப்பதற்கான நிதியத்தையும், உள்ளூர் புதுப்பிப்பதற்கான நிதியையும் பெற்று, புதுப்பிக்கும் முதலீட்டு தொழில் நிறுவனங்களை உருவாக்க, பெய்ஜிங்கும் ஷாங்காயும் முயற்சி மேற்கொண்டு, அறிவியல் தொழில் நுட்ப தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவு அளித்து வருகின்றன.
|