
சோச்சுவாங் நகரம்
சோச்சுவாங் நகருக்குள் நுழைந்ததும், ஆற்று நீருடன் கலந்து மணம் கமழும் கிராமியச் சூழ்நிலையை உணரலாம். இந்நகரைக் கண்டதும் வேதனை, கவலை, மன நிறைவின்மை ஆகியவை அனைத்தையும் மறுந்துவிடலாம்.
சோச்சுவாங் நகரம் அதன் தனிச்சிறப்புடைய இயற்கைக் காட்சிகளினால் பயணிகளுக்கு மன நிறைவு தருகின்றது.

படகு
சிறிய பாலம், ஆற்று நீர், வீடு ஆகியவற்றுடன் கூடிய அழகான நகரக் காட்சி, சிறிய நகருக்குரிய இயற்கை காட்சி. ஆற்று வழியை மையமாகக் கொண்டு இந்நகர் கட்டப்பட்டுள்ளது. கடைகளும் மக்களின் வீடுகளும் ஆற்றங்கரையில் கட்டப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வீட்டின் முன் வாசலிலும் ஆற்று நீர் பாய்கின்றது. ஆற்றின் குறுக்கே பழமை வாய்ந்த பல்வகை பாலங்கள் கட்டப்பட்டன. இப்பாலங்கள், நீர், பாதை, கடை, வீடு ஆகியவற்றை இணைக்கின்றன.

பாலம்
வெவ்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்ட இப்பாலங்கள் சோச்சுவாங் நகருக்கு அழகூட்டுகின்றன. நீரில் மிதக்கும் சிறிய நகரான சோச்சுவாங்கில், படகு தான் மிகவும் வசதியான போக்குவரத்து சாதனம் என்பதில் ஐயமில்லை.
படகுகளை நிறுத்திவைக்க வசதியாக, இந்நகரில் ஏறக்குறைய அனைத்து வீடுகளுக்கும் படகு துறை உண்டு.
|