• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-08 14:52:56    
திபெத் பாணியில் சிறிய ஹோட்டல்

cri

கடல் மட்டத்திலிருந்து 3600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள லாசா நகரில் நீல நிறமுடைய ஆகாயம், தெளிந்த லாசா ஆற்று நீர், செம் மற்றும் வெண் நிறமுடைய லாமா கோயில் ஆகியவற்றைத் தவிர, பயணிகள் செல்ல விரும்பும் இடம், லாசா நகரில் திபெத் பாணியில் கட்டப்பட்ட சிறிய ஹோட்டல் ஆகும்.

இந்த ஹோட்டலில் வசதி குறைவு என்பதைப் பொருட்படுத்தாமல், உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த வெளிநாட்டுப் பயணிகள் அடிக்கடி இங்கு சுயேச்சையுடனும் மகிழ்ச்சியுடனும் தங்கியிருப்பது வழக்கம். திபெத் பாணியில் கட்டப்பட்ட வேறு பல சிறிய ஹோட்டல்கள் போல, Banak Shol எனும் ஹோட்டல் வீதியிலுள்ள பல்வகை கடைகளுக்கிடையில் அமைந்துள்ளது.

இந்த ஹோட்டலின் கதவுக்கு மேலை தொங்கவிடப்படும் சீன, திபெத் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட பலகை இல்லாதிருந்தால், பயணிகள் இதைக் கண்டுபிடிக்காமல் இருந்திருப்பர். பயணி லீபிச்செய் எமது செய்தியாளரிடம் கூறியதாவது, இணையத் தளத்தில் சுயேச்சையுடன் சுற்றுலா பற்றிய தகவல் மூலம் இந்த ஹோட்டலைப் புரிந்துகொண்டிருக்கிறேன். இங்கு விலை மலிவு. இந்த ஹோட்டல் திபெத் பாணியில் கட்டப்பட்டதால் எனக்கு மிகுந்த அக்கறை ஏற்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் உண்மையில் நல்லது என்று இதை நேரடியாகக் கண்ட பிறகு உணர்ந்துள்ளேன் என்றார்.

தற்போது Banak Shol போன்ற திபெத் பாணியில் ஹோட்டல், மேலும் அதிகமான பயணிகளால் வரவேற்கப்பட்டுள்ளது. வசதி குறைவு, அளவில் சிறிய இந்த ஹோட்டலில், உண்மையான நெய் தேநீரைக் குடிக்கலாம். சுவாயான அயர்லாந்து கோப்பியையும் சுவாக்கலாம். சீனா மற்றும் மேலை நாடுகளின் தனிச்சிறப்பினால், இதர நட்சத்திர ஹோட்டல்களைப் போல, இந்த ஹோட்டலின் வியாபாரமும், விறுவிறுப்பாக நடைபெறுகின்றது.

தற்போது லாசாவில் இது போன்ற 10க்கும் அதிகமான ஹோட்டல்கள் உள்ளன. Banak Shol என்னும் ஹோட்டல், இவற்றில் புகழ்பெற்றது. லாசாவில் முதலாவது திபெத் பாணி ஹோட்டலான Banak Shol, உலகின் 10 சிறந்த மலைக்குன்று ஹோட்டல் என்று உலக சுற்றுலா அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்புகழ் பெற்ற சீனாவின் ஒரே ஒரு ஹோட்டலும் ஆகும்.

மலைக்குன்று ஹோட்டலானது, பீடபூமியிலோ மலைக்குன்று பகுதியிலோ பயணிகள் தங்கியிருக்கும் விலை மலிவான ஹோட்டல் என்று பொருட்படுகின்றது. Banak Shol ஹோட்டல், விலை மலிவு ஹோட்டல் என்ற போதிலும் அதன் ஈர்ப்புத் தன்மைக்குக் காரணம் இது மட்டுமல்ல. பயணிகள் இந்த ஹோட்டலில் தங்கியிருந்தால் அதன் பல தனிச்சிறப்பியல்புகளைக் கண்டுபிடிக்கலாம்.

இந்த ஹோட்டலின் முற்றத்தில் விளம்பரப் பலகை ஒன்று உள்ளது. இதில் பல எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஹாங்காங் பயணி சொங்யிங்சின் அண்மையில் சில வார்த்தைகளை எழுதினார். இந்த வழி முறை மூலம் தம்முடன் பயணம் மேற்கொள்ளும் புதிய நண்பரைக் கண்டுபிடிக்க விருப்பம் தெரிவித்தாள்.

அவர் கூறியதாவது, நான் சுற்றுலா நிறுவனத்துடன் இணைந்து சுற்றுலா செய்ததில்லை. ஏனெனில் இது சுதந்திரம் இல்லை. சில சமயத்தில் தொந்தரவு ஏற்படக் கூடும் என்றார் அவர். தாம் எழுதிய வார்த்தைகளைக் கண்ட பலர் தம்முடன் தொடர்பு கொண்டதாகச் செய்தியாளரிடம் அவள் கூறினாள்.

 Banak Shol ஹோட்டலில் தகவல் பரிமாறிக்கொள்வது தவிர, பயணிகள் பழகிக்கொள்ளும் நல்ல இடமும் ஆகும். வசதி குறைவான இந்த ஹோட்டலில் எளிதில் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த பயணிகள் இங்கு வந்து, சுற்றுலாவில் மகிழ்ச்சி மற்றும் களைப்பு பற்றி கூறலாம். வெவ்வேறான பண்பாடுகள் இந்தச் சிறிய ஹோட்டலில் தளர்ச்சியாகவும் அன்பாகவும் பரிமாறிக் கொள்ளலாம்.

இந்த ஹோட்டலின் முற்றத்தில் இரும்பு வேலியால் சூழப்பட்ட சிறிய பூங்கா ஒன்று உள்ளது. பூங்காவின் மேற்கு பகுதியிலுள்ள திறந்த வெளியில் தேநீர் கடை ஒன்று உள்ளது. பயணிகள் அங்கு உணவு உண்ணலாம். தேநீர் குடிக்கலாம். நூல் படிக்கலாம். உரையாடலாம். இந்தத் தேநீர் கடையில் நாள்தோறும் ஆட்கள் நிறைந்துகாணப்படுகின்றனர் என்று சச்சுவான் மாநிலத்திலிருந்து வரும் பயணி சாங்ஸுக்கெய் எமது செய்தியாளரிடம் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, Banak Shol ஹோட்டலில் சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் தங்கியிருக்கின்றனர். சில வேளையில் இந்தத் தேநீர் கடையில் பத்து அல்லது இருபது பேர் அமர்ந்தனர். அவர்கள் ஏதோ பற்றி யோசித்துக்கொண்டிருந்தனர். ஆழ்ந்த சிந்தனையில் இருந்தனர். அவர்கள் இப்படி இருப்பதற்குக் காரணம் என்ன? என்று உங்களுக்குச் சந்தேகம் ஏற்படக் கூடும். அப்படிச் செய்வது மிகவும் நல்லது என்பதே காரணம் தான்.

அங்கு ஏராளமான நண்பர்களுடன் பழகலாம். ஓர் ஆண்டில் ஏறக்குறைய சில நாட்களில் என் மனம் அமைதியாக இருப்பதற்காக, லாசாவிலுள்ள Banak Shol ஹோட்டலில் தங்கியிருப்பது வழக்கம் என்றார்.