• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-23 16:38:30    
சாங் சுன் ஹேவின் ஈடுபாடு

cri

தவிரவும், தமது படிப்பறையில் நூற்றுக்கணக்கான மரப்பெட்டிகளில் பல்வேறு வண்ணத்துப் பூச்சிகளின் மாதிரிகளைச் செய்து வைத்திருக்கிறார். இவரிடம் உள்ளவற்றில் முக்கியமானது கெய்ஸர் இ ஷிந்த் எனப்படும் இந்திய வண்ணத்துப்பூச்சி, மேலும், 25-30 கெ.மீ அகலத்திற்கு இறக்கை உள்ள அட்லாஸ் மோத் எனப்படும் வண்ணத்துப்பூச்சியையும் இவர் வைத்திருக்கிறார்.

வண்ணத்துப்பூச்சிகளின் வண்ண வண்ண இறக்கைகளை வரிசைப்படுத்தி, அழகான ஓவியம் தீட்டும் கலையையும் கற்றிருக்கிறார். இத்தகைய "ஆல்ட்டர் ஈகோ" என்ற ஓவியத்தில், புல்லாங்குழல் வாசி க்கும் பெண்ணன் இசையில் மயங்கி நிற்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியை வளர்ந்திருக்கிறார். இநதப் பல வண்ண ஓவியத்தில வண்ணங்களுக்குப் பதிலாக, உண்மையான வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகளையே பயன்படுத்தியிருக்கிறார். இந்த ஓவியத்தை வரைய ஒரு மாதம் பிடித்ததாம்.

அனைத்திற்கும் மேலாக, எனது மாணவர்களுக்கு வகுப்பறையிலேயே பாடம் கற்றுத் தராமல், அவர்களைத் திறந்த வெளிக்கு அழைத்துச் சென்று, இயற்கைக் காட்சிகளை விளக்கி, பாடம் நடத்துகிறார். அப்போது மாணவர்களோடு சேர்ந்து பல வண்ணத்துப்பூச்சிகளைப் பிடிக்க முடிகிறது.

சரி, ஆசிரியர் ச்சாங் சுன்ஹே வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றி சேகரித்து வைத்துள்ள சில அரிய தகவல்களைத் தெரிந்து கொள்வோமா?

உலகிலேயே மிகப் பெரிய வண்ணத்துப் பூச்சி பாம்புவா நியூ கினி என்ற நாட்டின் வட பகுதியில் உள்ள மழைக்காடுகளில் உள்ளது. Queen Alexandra's Bird Wing எனப் பெயரிடப்பட்ட அதன் இறக்கையின் அகலம் ஒரு அடி.

வண்ணத்துப்பூச்சிகளை வேறு மிருகங்கள் தின்றால் அவை செத்து விருமாம். காரணம், இந்த வண்ணத்துப்பூச்சி கம்பளிப்புழு வடிவத்தில் இருக்கும் போது, விஷம் கலந்த ஒரு செடியைத் தின்கிறது. இதனால் வண்ணத்துப் பூச்சியின் உடம்பில் விஷம் கலந்து விடுகிறது. எனவே, பெரிய விலங்குகள் இந்த பெரிய வண்ணத்துப் பூச்சியைக் கண்டதுமே ஓடி ஒளிகின்றனவாம்.

உலகிலேயே மிகச் சிறிய வண்ணத்துப்பூச்சி அமெரிக்காவில் உள்ளது. Pigmy Blue எனப் பெயரிடப்பட்ட அதன் இறக்கையின் அகலம் 0.62 அங்குலம்-அதாவது ஒன்றரை செ.மீ.

தென் கிழக்காசியக்காடுகளில் உள்ள அம்லஸ் மோத் என்ற புழுதான் வண்ணத்துப்பூச்சிப் புழுக்களிலேயே மிகப் பெரியது. இதன் இறக்கையும் ஒரு அடி அகலம் உடையது. இது பறக்கும் போது ஒரு பறவை போல இருக்கும். இதன் இறக்கைகளின் விளிம்பு பாம்பு போன்று இருப்பதால் இதைத் தின்பதற்காக எந்த மிருகமும் நெருங்குவதில்லை. மேலும், இதற்கு வாய் கிடையாது. எனவே தனக்குத் தேவையான உணவை எல்லாம் கூட்டுப்புழுவாக இருக்கும் போதே தின்று விடுகிறது. இந்தக்கூட்டுப்புழு மரத்தில் தொங்கும் போது ஒரு பெரிய பழம் போலவே இருக்கும்.

ஒரு வண்ணத்துப் பூச்சியின் ஆயுள், அது காட்டில் வளருமானால் 7 முதல் 10 நாட்கள் தான். பிடித்து வைத்து வளர்க்கப்படுமானால் இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை உயிருடன் இருக்கும். சில வகை வண்ணத்துப்பூச்சிகள் அழுகிய பழம், மற்ற விலங்குகளின் கழிவு, பூக்களின் மரத்தம் போன்றவற்றை இரையாகத் தின்பதால், அம்னோ அமிலங்கள் அதிகம் சுரந்து 3 முதல் 6 மாதங்கள் வளர கூட உயிர் வாழ்கின்றன.

உலகில் சுமார் 2 லட்சத்து 65,000 வண்ணத்துப்பூச்சி மற்றும் புழுக்களின் வகைகள் உள்ளன. இந்தப் புழுக்களில் 20,000 மட்டுமே வண்ணத்துப்பூச்சிகளாக உருமாற்றம் அடைகின்றன. சீனாவில் மட்டும் 1222 வண்ணத்துப்பூச்சி வகைகள் உள்ளன.