• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-23 16:36:23    
சமாதான முறையிலான விடுதலையின் 55வது ஆண்டு நிறைவு

cri

மே 23ம் நாளான இன்று சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் பல்வேறு சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகள் ஒன்று கூடி திபெத் சமாதான முறையில் விடுதலை பெற்றதன் 55வது ஆண்டு நிறைவை கொண்டாடியுள்ளனர்.

1951ம் ஆண்டு மே திங்கள் 23ம் நாளன்று மத்திய அரசும் திபெத் உள்ளூர் அரசும் சமாதான முறையில் திபெத்தை விடுதலை செய்வது தொடர்பான உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளன. கடந்த 55 ஆண்டுகளில் திபெத்தின் பொருளாதாரம் போதியளவில் வளர்ச்சியடைந்துள்ளது. 2005ம் ஆண்டில் அதன் உற்பத்தி மதிப்பு 2500 கோடி யுவானை தாண்டியுள்ளது. விடுதலைக்கு முந்தியதை விட இது சுமார் 20 மடங்கு அதிகமாகும். நகரம் மற்றும் கிராமப்புறத்தில் வாழ்கின்ற மக்களின் வருமானம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. விவசாயிகள் மற்றும் மேய்ப்பவர்களின் வாழ்க்கை தரமும் பெரிதும் மேம்பட்டுள்ளது. மதம் விரும்புவோரின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் பல்வேறு கோயில்களில் நடைபெறுகின்ற இயல்பான மத நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட முறையில் பராமரிக்கப்பட்டுள்ளன என்று லாசா நகரின் மத சங்க தலைவர் லாப்சாங்பா த்ரெலக்யூசாங் கூறியுள்ளார்.