• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-24 08:52:26    
வருத்தம் தந்த விஷயம்

cri
எல்லோராலும் மதிக்கப்பட்ட பெரியவர் லு மனைவியை இழந்தவர். கடைசிக் காலத்தில் தன்னைக் கவனித்துக் கொள்ள வீட்டில் ஒரு ஆள் வேண்டுமே என்பதற்காக ச்சூ என்ற இளம் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து அழைத்து வந்தார். அவருக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை. ஒரு கிழவனோடு வாழப் பிடிக்காமல் எந்த நேரமும் சிடுசிடுத்துக் கொண்டே இருந்தாள். எடுத்ததற்கு எல்லாம் கோபப்பட்டாள். ஒரு நாள் லு கேட்டார்.

"பெண்ணே, ஒரு கிழவனைக் கட்டிக்கிட்டதுக்காக வருத்தப்படறியா?"

"இல்லே."

"எனக்கு பெரிய பதவி இல்லையேன்று கவலையா?"

"இல்லை."

"பின்னே என்னத்துக்கு சிடுசிடுன்று இருக்கே?" அதுக்கு அவள் மிகவும் பணிவோடு பதில் சொன்னாள்.

"உங்களுக்கு வயசு அதிகம்னோ, பெரிய பதவி இல்லையே என்றோ எனக்கு வருத்தம் இல்லே. என்னுடைய ஒரே வருத்தம் உங்களை உங்களுடைய இளமையில சந்திக்க முடியாம ரொம்ப தாமதமா பிறந்துட்டேன்."

 

சவடால் பேச்சு

"எங்க ஊர் கோயிலுல ஒரு பெரிய பேரிகை இருக்குது. அந்தக் கொட்டை அடிச்சா 100 மைல் தூரத்துக்கு கேட்கும்" என்று ஒருவன் பீற்றிக் கொண்டான். அப்போது இன்னொருவன் இடை மறித்து,

"எங்க ஊர்ல ஒரு மாடு இருக்குது. அது யாங்ச்சி நதியின் தென் கரையில தண்ணீர் குடிச்சா, அதோட தலை வட கரையில இருக்கும்."

இதைக் கேட்டதும் முதல் ஆள் எரிச்சல்பட்டான். தலையை உலுக்கிய படியே,

"அவ்வளவு பெரிய மாடு இருக்க முடியாது" என்றான்.

"ஏன்? 100 மைல் தூரத்துக்கு கேப்பிற மாதிரி ஒலி எழுப்பற பேரிகையைச் செய்வதற்கு அவ்வளவு பெரிய மாட்டுத்தோல் வேணும் இல்லியா?"