• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-25 08:31:05    
பெய்சிங்கில் ஒலிம்பிக் கல்வி (1)

cri

ஒலிம்பிக் என்றால் என்ன பொருள் என்பது உங்களுக்குத் தெரியுமா?"இளைஞர்களும் சமாதானமும்"என்பதுதான் பொருள். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், பல்வேறு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்திய நகரங்களும் இளைஞர்கள்மீதான கல்வியிலும் செல்வாக்கிலும் எப்பொழுதும் கவனம் செலுத்திவருகின்றன.

இளைஞர்களிடையில் ஒலிம்பிக் எழுச்சியை பரப்புவதற்கு மேலும் முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன. 2008ஆம் ஆண்டு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முதல் முறையாக சீனாவில் நடைபெறும். சீனாவில் குறிப்பாக பெய்சிங்கில் இளைஞர்களிடையில் ஒலிம்பிக் எழுச்சி பற்றிய கல்வி எப்படி நடத்தப்பட்டு வருகின்றது என்பதை இப்பொழுது அறியலாம்.

2005ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டு கமிட்டியும், சீனக் கல்வி அமைச்சகமும் "2008ஆம் ஆண்டு பெய்சிங்கின் துவக்கநிலை மற்றும் இடைநிலை பள்ளிக்கூட மாணவர்களுக்கான கல்வி பற்றிய திட்டத்தை"கூட்டாக வகுத்து, பெய்சிங் வட்டாரத்திலுள்ள 20 ஒலிம்பிக் கல்விக்கான மாதிரி பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டன. இந்த பள்ளிக்கூடங்களில் பெய்சிங் 9வது பள்ளிக்கூடம் இடம்பெறுகின்றது. இந்த பள்ளிக்கூடத்தில் ஒலிம்பிக் கல்வி எப்படி நடத்தப்பட்டது என்பது பற்றி மாணவர்கள் வருமாறு கூறுகின்றார்கள்-

"ஒவ்வொரு வாரமும் தேசியக் கொடி ஏற்ற விழா"நடைபெறுவது வழக்கம். முன்பு விழா நடைபெறும் போது, தேசியக் கொடியின் கீழே உரை நிகழ வேண்டும். இப்பொழுது, இதை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுடன் இணைத்து, ஒலிம்பிக் அறிவுப் பற்றிய உரையை மாணவர்கள் நிகழ்த்த வேண்டும். வாரத்துக்கு ஒரு வகுப்பு ஒரு முறை. அனைவரும் உரை நிகழ்த்தும் வாய்ப்பு உண்டு.

இவ்வாறு, நாங்கள் ஒலிம்பிக் பற்றிய அறிவை சேகரிக்க வேண்டும். இதன் மூலம், ஆசிரியர் மாணவர்களுக்கு நேரடியாக பாடம் சொல்லிக்கொடுப்பதைவிட மேலும் அதிக அறிவை பெறலாம். அத்துடன் ஒவ்வொரு வாரமும் ஒரு வகுப்பு கூட்டம் நடைபெறும் போது, இது பற்றிய கல்வியும் நடத்தப்படும் என்று மாணவர்கள் கூறினார்கள்.