• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-26 06:51:25    
பெய்சிங் ஒலிம்பிக் கல்வி (2)

cri

உரை நிகழ்த்துவதை தவிர, ஒலிம்பிக் அறிவுப் போட்டிக்கான பல ஒலிம்பிக் கல்வி நடவடிக்கைகள் நடைபெறும். இந்த நடவடிக்கைகள் மூலம்,  ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பற்றிய அறிவை மாணவர்கள் அறிந்து கொள்வதோடு, விளையாட்டுகள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் மேலும் ஆர்வம் கொண்டுள்ளனர். மேலும் முக்கியமானது என்னவென்றால், அவர்கள் ஒலிம்பிக் எழுச்சியின் சில முக்கிய அம்சங்களை படிப்படியாக கிரகித்துகொள்ளலாம். செங் மொங் என்பவர், 9வது பள்ளிக்கூடத்தில் ஒரு சாதாரன மாணவர், அவர் செய்தியாளரிடம் கூறியதாவது-

ஒலிம்பிக் விளையாட்டுகளின் எழுச்சியில், எங்களுக்கு தெரிந்த சில அறிவை தவிர, எங்களின் அன்றாட படிப்பு மற்றும் வாழ்க்கையும் இந்த அறிவை பிரதிபலிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, "மேலும் உயரம், மேலும் வேகம், மேலும் வலிமை"என்பது, ஒருவரின் சுய நம்பிக்கையைப் பிரதிபலிக்க வேண்டும். போன முறை நான் நிகழ்த்திய உரையின் தலைப்பு "சவாலை எதிர்நோக்கிய எனக்கு துணிவு உண்டு"என்பதாகும்.

எனது துணிவு என்றால், இன்னல்களையும் சவாலையும் எதிர்நோக்க துணிவைக் கொண்டுள்ள நான் நம்பிக்கையுடன் இருக்கின்றேன் என்பதாகும் என்றார். 9வது இடைநிலை பள்ளிக்கூட மாணவர்கள் ஒலிம்பிக் கல்வியில் பெற்றுள்ள உணர்வை, தமது நடவடிக்கைகளில் வெளியிட்டுள்ளனர். எடுத்துக் காட்டாக, பள்ளிகூடத்தின் சுற்றுப்புற தூய்மையில் மாணவர்கள் மேலும் கவனம் செலுத்துகின்றனர், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவர்கள் மேலும் அக்கறையை அதிகரித்துள்ளனர்.

முன்பைவிட மேலும் அதிகமான நேரத்தை விளையாட்டுகளில் செலவழிகின்றனர். 9வது பள்ளிக்கூடம் தவிர, இதர ஒலிம்பிக் கல்வி மாதிரி பள்ளிகூடங்களும் பல வேடிக்கையான நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர். பெய்சிங் மாநகரின் சுங்வென் பகுதியிலுள்ள குவாங் சி மென் பள்ளிகூடத்தின் வாசலின் இரு பக்கங்களிலும் உருவாக்கப்பட்ட பத்து மீட்டர் உயரமுடைய 4 ஒலிம்பிக் பண்பாட்டு சுவர்கள் ஒலிம்பிக்கின் கடந்த காலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை விளக்கிக் கூறுகின்றன.

ஹைதியன் பகுதியிலுள்ள யாங் பாங்தியன் மைய துவக்கப் பள்ளிகூடத்தில் உள்ள சிறு மாணவர்கள் ஒரு வகுப்பு, ஒரு நாடு என்ற வடிவத்தில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழா மாதிரியில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். பெய்சிங் மாநகர அரசின் கல்வி கமிட்டிக்கு இன்னொரு திட்டம் உண்டு. அதாவது, பெய்சிங்கிலிருந்து 200 பள்ளிகூடங்களைத் தேர்ந்தெடுத்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் சுமார் 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் ஒலிம்பிக் கமிட்டிகளுடன் ஒன்றுக்கு ஒன்று தொடர்பை உருவாக்குவதாகும்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்யும் போது, இந்த பள்ளிக்கூடங்கள் அதனதன் தொடர்பு நாட்டிடம் அல்லது பிரசேதத்திடம் மொழியையும் பண்பாட்டையும் கற்றுக்கொள்கின்றன. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது, இந்த பள்ளிகூட மாணவர்கள் உரிய பிரதிநிதிகளுடன் ஒலிம்பிக் கிராமத்தில் கொடியேற்ற விழாவில் கலந்துகொண்டு, அவர்களின் போட்டிகளைப் பார்வையிடுவார்கள்.