• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-24 10:36:42    
தைவான் பிரச்சினை பற்றிய நேயர்களின் கருத்து

cri
க்ரீட்டஸ்: பிப்ரவரி 28ம் நாள் அன்றைய தைவான் ஆட்சியாளருக்கு சீன மக்கள் கண்டனம் என்ற செய்தித் தொகுப்பு குறித்து எழுதியுள்ளார், மதுரை அண்ணா நகர் நேயர் ஆர். அமுதாராணி. தைவான் சீனாவிலிருந்து பிரிக்க முடியாத பகுதி, தைவான் ஆட்சியாளரின் அறிவிப்பு தைவானை பிளவுபடுத்தும் செய்லாகும். இருகரை உறவில் விரிசலை உண்டாக்கும் செயலாகும், தைவான் ஆட்சியாளரின் இருகரை உறவில் குழப்பம் ஏற்படுத்தும் செயலை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் சீன மக்களின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் எழுதியுள்ளார்.
வாணி: அடுத்து திருநெல்வேலி கடையாலுருட்டி நேயர் எம். பிச்சைமணி எழுதிய கடிதம். மார்ச் 4ம் நாள் நட்புப்பாலம் நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் திரு.கன்னியப்பன் 3 முறை சீனப்பயணம் மேற்கொண்டதை எண்ணி இரும்பூதெய்துகின்றேன். அவர் சீனாவில் பீகிங் நகரில் செய்யும் ஆய்வு மற்றும் விருப்பத் தேர்வு முறையிலான கூட்டு கல்வித் திட்டங்கள் ஆகிழவை என்னை வெகுவாக கவர்ந்தன. சீன மண்ணும் இந்திய மண்ணும் இணைந்து பணியாற்றுவது கல்வித்துறைக்கும்ப் பெருமை சேர்ப்பதாகும். பேட்டி கண்ட ராஜாராம் அவர்களுக்கு பாராட்டுக்கள் என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து நாமக்கல் மாவட்டம் வெண்ணாந்தூர் நேயர் எஸ். சுப்பிரமணியம் எழுதிய கடிதம். சீன வானொலி நிலையம் அனுப்பிய சீனத் தமிழொலி மலர் 3, இதழ் 6, 7 ஆகியவை கிடைத்ததாகவும். அதில் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்ற கட்டுரையை படித்து, சீனாவில் உள்ள இடங்களை சுற்றிப் பார்த்த உணர்வும், மகிழ்ச்சியும் ஏற்பட்டதாகவும் எழுதியுள்ளார். இலங்கை காத்தான்குடி நேயர் மு.மும் முகம்மட், மார்ச் 2ம் நாள் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் குறித்து எழுதிய கடிதத்தில், செய்தித் தொகுப்பில் போதை பொருள் ஒழிப்பு பற்றி கூறப்பட்டது.
போதை பொருட்களை ஒழிக்க முடியாததை மார்ச் முதல் தேதியன்று சர்வதேச போதை மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் கூறியது, வங்காளதேசம், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளில் போதைப் பொருள் கட்டுபாடின்றி பயன்படுத்தப்படுவது, அமெரிக்கா, கொலம்பியா நாடுகளில் போதைப் பொறுட்களின் நிலை ஆகியவற்றை விளக்கமாக அறிந்து கொண்டேன். அன்றைய அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் 27 புதிய உயிரினங்கள் பற்றி ராஜாரம் அவர்கள் கூறினார். பல உயிரினங்களின் முக்கியத்துவம் பற்றியும் அறிந்துகொண்டேன் என்று எழுதியுள்ளார்.