பெய்சிங் ஒலிம்பிக் போட்டி பற்றிய அன்னானின் கருத்து
cri
பெய்சிங் ஒலிம்பிக் போட்டி பெரும் வெற்றி பெறும் என தாம் நம்புவதாக, ஐ.நா தலைமை செயலாளர் அன்னான் நேற்று பெய்சிங்கில் தெரிவித்தார் என்று, பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டியின் அதிகாரப்பூர்வ இணையத் தளம் அறிவித்தது. கட்டப்பட்டு வரும் பெய்சிங் ஒலிம்பிக் போட்டியின் மைய விளையாட்டு அரங்கமான தேசிய விளையாட்டு அரங்கத்தை அன்னான் நேற்று பார்வையிட்டார். பார்வையிட்ட பின் பேசிய அவர், பெய்சிங் ஒலிம்பிக் போட்டியின் ஆயத்தப்பணி கவனத்துக்குரிய வெற்றிகளை பெற்றிருப்பதாக கூறினார். பெய்சிங் ஒலிம்பிக் போட்டிக்கான முழக்கமும், கருத்தும் பரப்பியுள்ள தகவல், சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. 2008 ஒலிம்பிக் போட்டி, பெரும் வெற்றி பெறும் என தாம் நம்புவதாக அன்னான் சொன்னார்.
|
|