இவ்வாண்டின் முதல் நான்கு திங்களில் சீனத் தொழிற்துறை நிறுவனங்களின் லாபம், சுமார் 48 ஆயிரம் கோடி யுவானை எட்டியது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, இது, 22 விழுக்காடு அதிகரித்தது. சீன தேசிய புள்ளி விபர பணியகம் இன்று வெளியிட்ட திங்கள் அறிக்கை இதனைக் காட்டுகின்றது. எண்ணெய், இயற்கை வாயு அகழ்வு, இரும்பற்ற உலோகம் உருக்குதல் போக்குவரத்து சாதன உற்பத்தி, மின்னாற்றல் மற்றும் மின்னணு தொலைத் தொடர்பு ஆகியவற்றின் லாப அதிகரிப்பு ஒப்பீட்டளவில் அதிகம். இரும்புருக்கு வேதியியல் தொழிற்துறை, ரசாயன நூல் முதலிய துறைகளின் லாபம் குறைந்தது. எண்ணெய் பதனீட்டு மற்றும் கற்கரி உருக்குதல் துறைகளில் நட்டம் ஏற்பட்டுள்ளது. இத்தொழிற்துறை நிறுவனங்களில், தனியார் தொழில் நிறுவனங்களின் லாப அதிகரிப்பு, 47 விழுக்காட்டை அடைந்துள்ளது.
|