• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-01 11:06:34    
ஒலிம்பிக் செய்திகள்

cri

2008 பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான அரங்கங்கள், போட்டி நடைபெறவுள்ள இடங்கள் ஆகிரவற்றின் வடிவமைப்பையும், கட்டுமானத்தையும் ஐ. நா பொதுச் செயலாளர் அன்னான் பாராட்டியுள்ளார். 29வது ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பெய்சிங் மாநகரில் 2008ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளன. அண்மையில் சீனாவுக்கு பயணமாக வந்த ஐ.நா பொதுச் செயலாளர் அன்னான், பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான சீனாவின் தயாரிப்புகளை பார்வையிட்டார்.

பறவைக்கூடு என்று அழைக்கப்படும் 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்காக கட்டுமானம் செய்யப்பட்டுவரும் தேசிய விளையாட்டரங்கத்தை பார்வையிட்ட அன்னான், அதன் வடிவம் படைப்பாற்றல் மிக்கதாக பாராட்டியதோடு, 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் நாள் 29வது ஒலிம்பிக் போட்டிகள் துவங்கும்போது, இந்த விளையாட்டரங்கம் முழு உலகையும் ஒன்றாக்கி வைத்திருக்கும், உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளின் உன்னதமான அடையாளம் இது என்று கூறினார்.

திட்டப்படி பெய்சிங் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுவின் தயாரிப்புப் பணிகள் நகர்ந்துகொண்டிருப்பதை குறிப்பிட்டு 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு சிறப்பானவைகளில் ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை, அவ்வமையம் இங்கே இருக்க முடியும் என்று தான் நம்புவதாகவும் அன்னான் கூறினார். 2008ஆம் ஆண்டு பெய்சிங்கில் நடைபெறவுள்ள பாராலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட திகாரிகளுக்கு அவர்களது பயண செலவை பெய்சிங் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழு ஏற்றுக்கொள்ளவுள்ளதோடு அவர்களுக்கு இலவசமாக தங்குமிட வசதிகளையும் ஏற்படுத்தித் தரவுள்ளதாக இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் பாராலிம்பிக் போட்டித்துறையின் இயக்குநர் ஷாங் ச்சியுப்பிங் கூறியுள்ளார்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வீரர்கள் அனுபவிக்கும் அதேவிதமான சலுகைகளை உடல் ரீதியில் சவால் விடுக்கப்பட்ட அல்லது ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக்ஸான பாராலிம்பிக்ஸ் வீரர்களும் முதன்முறையாக பெறவுள்ளனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினர். 2000ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குகொள்ளும் வீரர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பயண செலவும், தங்குமிட வசதியும் ஒருங்கிணைப்புக் குழுவினரால் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையில் சர்வதேச ஒலிம்பிக் குழுமத்திற்கும், சர்வதேச பாரலிம்பிக் குழுமத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்றின்படி 2008ஆம் ஆண்டு பெய்சிங் பாராலிம்பிக் போட்டிகள் முதலாக இனி பாரலிம்பிக் போட்டிகளின் வீரர்கள், அதிகாரிகளுக்கும் இந்த தங்குமிட வசதி, பயண செலவு ஆகிய சலுகைகள் வழங்கப்படவுள்ளன. பெய்சிங் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழுதான் ஒலிம்பிகையும், பாரலிம்பிக்கையும் என இரண்டையும் நடத்துகிற முதல் ஒருங்கிணைப்புக் குழுவாகும்.

2008ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 8ம் நாள் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கும். ஒலிம்பிக் முடிந்த 12 நாட்கள் கழித்து பாரலிம்பிக்ஸ் செப்டம்பர் 6 முதல் 17ஆம் நாள் வரை நடைபெறும். ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் அதே விளையாட்டு அரங்கங்கள், போட்டி நடத்துமிடங்கள் பாரலிம்பிக்ஸிற்கும் பயன்படுத்தப்படும். இந்த பாரலிம்பிக்கில் 150 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து4000 வீரகளும், 2500 விளையாட்டு அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.