• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-02 14:09:19    
உலகக் கோப்பை கால்பந்து

cri

கால்பந்து விளையாட்டின் திருவிழாவான உலக்கோப்பை கால்பந்து போட்டிகள் ஜுன் 12ஆம் நாள் முதல் ஜூலை 12ஆம் நாள் வரை, ஜெர்மனியில் நடைபெறவுள்ளன. உலகக்கோப்பையை வெல்லப்போவது யார் என்பது தெரிய ஜூலை 12ஆம் நாள் வரை காத்திருக்க வேண்டும் என்றாலும், பரவலாக மக்கள் வெற்றி பெரும் அணியாக எதிர்பார்ப்பது, மக்களின் விருப்பத் தேர்வாக கூறப்படுகிற நாடு பிரேசில். கடந்த 2002ஆம் ஆண்டின் உலகக்கோப்பையை வென்ற பிரேசில் நாடு இந்த முறையும் கோப்பையைத் தட்டிச் செல்லும் என்பதே கால்பந்தாட்ட ரசிகர்கள் பெரும்பாலோனோரின் கருத்து.

ஆனால் இந்த எதிர்பார்ப்பே பிரேசில் அணிக்கு இடஞ்சலாக இருக்கும் வாய்ப்புகளை பலரும் கூறுகின்றனர். கால்பந்தாட்ட உலகில் திறமைசாலிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவரான பிரேசில் நாட்டு பெலே கூட முந்தய உலகக் கோப்பை வெற்ரியாளர்களாக எதிர்பார்க்கப்பட்ட அணிகள் பல துரதிர்ஸ்டம் எதிர்பார்ப்புகளால் உருவாகும் அழுத்தம், இவற்றால் கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளனர் அதே நிலை பிரேசிலுக்கும் வரலாம் என்று குறிப்பிடுகிறார்.

இன்றைக்கு பிரேசில் அணிக்கு உள்ள பெரும் எதிரி, மக்களின் மனம்கவர அணியாக, விருப்ப அணியாக இருப்பதுதான் என்கிறார். பெலே. 1958,1962,1970,1994,2002 என இதுவரை ஐந்து முறை உலகக்கோப்பையை பிரேசில் வென்றுள்ளது என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது. தற்போதைய பிரேசில் அணியில் ரொனால்டோ,ரொபார்ட்டோ கார்லோஸ், ரொனால்டின்யோ, ராபின்யோ உள்ளிட்ட கால்பந்தாட்ட ரசிகர்களின் மனதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை போட்டிக்கென தீவிர பயிற்சி செய்துவிட்டு இரவு தூங்கி விழுத்ததும் யார் எந்த அணி, அணியின் எதிர்காலம் என்ன என்ற கேள்விகளை எதிர்கொண்டுள்ளது ஒரு அணி. செர்விய மான்டநீக்ரோ அணிக்குத்தான் இந்த நிலை. நேற்று ஒன்ராக அனைவரும் பயிற்சி செய்து இன்று காலை விழித்தால் செர்பியா தனியாக, மான்டநீக்ரோ தனியாக...

ஆம், தனி நாடாக பிரிந்து செல்லும் வெகுமக்கள் வாக்கெடுப்பில் மான்டநீக்ரோவின் மக்கள் பெரும்பான்மையினர் ஆதரவாக வாக்களித்ததற்கு பின்பான நாளில்தான் செர்விய மான்டநீக்ரோ கால்பந்து அணியில் இந்த குழப்பம். ஆனால், தற்போதைய இந்த புதுமையான ஒரு சூழலில் தங்களுடைய தாயிரிப்புகள் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே அணியாகவே செர்பிய பகுதியின் வீர்களும், மான்டநீக்ரோ பகுதியின் வீரர்களும் களத்தில் இறங்குவாரக்ள் என செர்பிய மான்டநீக்ரோ கால்பந்தாட்ட கழகத்தின் தலைவர் டோமிஸ்லாவ் கராட்ஸிக் கூறியுள்ளார்.