முதலில் ஆப்பிள் பழத்தை எப்படி அறிவியல் முறையில் தின்னுவது என்று பேசலாமா? பொதுவாக மக்கள் ஆப்பிள் பழத்தை இரண்டு முறைகளில் உட்கொள்கின்றனர். ஒன்று தோலை சீவி அப்புறம் உட்கொள்வது. இன்னொறு தோலுடன் அப்படியே தின்னுவது. இப்படி தின்றால் பிரச்சினை தான் வரும். ஏனென்றால் ஆப்பிள் பசுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அதை கிடங்கில் சேர்ப்பதற்கு முன் ஆப்பிளின் மேல் பசுமைப் பராமரிப்பு மருந்து தெளிக்கப்படுகின்றது. இந்த மருந்து நமது உடம்புக்குள் போனால் நன்மை விளையாது. எப்படி தீர்ப்பது?நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். தோலில் உள்ள பசுமைப் பாதுகாப்பு மருந்தை அழிப்பதற்கு நான்கு வழிமுறைகள் உண்டு. ஒன்று, ஆப்பிள்களை உட்கொள்வதற்கு முன் தண்ணீரில் எடுத்து ஆப்பிள் தோல் மீது லேசாக உப்பு தடவுவது.
இந்த உப்பினால் தோலிலுள்ள மருந்தில் ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. பிறகு தண்ணீரில் ஆப்பிளை கழுவிய பின் தாராளமாக தின்னலாம். உப்புக்கு கிருமியைக் கொல்லும் சக்தி அதிகம். அல்லவா?. இன்னொரு வழிமுறை என்ன என்றால் ஒரு கிண்ணத்தில் உருளை கிழங்கு மாவை தண்ணீரில் போட்டு அந்த மாவுக் கரைசலில் ஆப்பிளை கழுவ வேண்டும். இந்த வழி முறை திராட்ச்சை, பீச் ஆகிய பழங்களை கழுவுவதற்கு ஏற்றது. குறிப்பாக திராட்சை கழுவுவதற்கு சிறந்த வழி முறையாகும். ஏனென்றால் திராட்சையை சுத்தம் செய்வது மிக இன்னலானது. இந்த உருளை கிழங்கு கரைசலில் திராட்சையை கழுவினால் பழத்தின் மேல் ஒட்டியுள்ள கிருமி எளிதாக நீக்கப்படும். 3வது வழிமுறை என்ன என்றால் பற்பசையை ஆப்பிளின் மீது தேய்த்து சுத்தப்படுத்தலாம். அதை போல வென்னீரில் ஆப்பிளை கழுவி அதன் பிறகு தின்னலாம்.
நான்காவது வழிமுறை எது என்றால் எல்லோரும் செய்யக் கூடியது. அதாவது பேரங்காடியில் பழங்களைக் கழுவும் திரவம் விற்கிறது. அதை வாங்கி ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை கழுவலாம். இந்த நான்கு வழிமுறைகளை நீங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துங்கள்.
|