• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-29 19:58:21    
சோதனைக் குழாய் குழந்தை

cri
உலகிலேயே மக்கள் தொகை அதிகமாக உள்ள நூற்று முப்பது கோடிக்கும் மேல் மக்களைக் கொண்ட சீன நாட்டிலே கடந்த ஜனவரி இருப்பதாறாம் நாள் ஒர் அமைதிப் பரட்சி நடந்தது. ஆம்!அன்றைய தினர் மூன்று உறைவிப்பு நுட்பத்தின் அடிப்படையில் சீனாவின் முதலாவது சோதனைக் குழாய் குழந்தை பிறந்தது.

சோதனைக் குழாய் குழந்தை உலகில் மகப்பேறு வாய்ப்பு கிடைக்காத லட்சக்கணக்கான தம்பதிகளின் கணவை நனவாக்கியுள்ளது. சீனாவில் முதலாவது சோதனைக் குழாய் குழந்தை 1988ம் ஆண்டு மார்ச் 10ம் நாள் பிறந்தது. ஆனால், புற்றுநோய் சிகிச்சை பெறும் பெண்களின் கருமுட்டை, கெமோ மருந்து மற்றும் கதிர் வீச்சின் பக்க விளைவுகளால் பாதிக்கப்படுவதால், அவர்களால் செயற்கைக் கருத்தரிப்பு அடைய முடியாமல் இருந்தது. இந்த நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று நீண்டகாலம் ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள், மூன்று உறைவிப்பு நுட்பத்தை உருவாக்கினார்கள். இதன் கீழ், பெண்ணின் கருமுட்டை, ஆணின் விந்தணு, இரண்டும் கலந்த பெண்ணின் கரு ஆகியவை உறை நிலையில் வைக்கப்பட்டு, பின்னர் கருத்தரிப்புச் செய்யப்படுகிறது. இந்த வகையில் உலகின் முதலாவது மூன்று உறைவிப்பு நுட்ப சோதனைக்குழாய் குழந்தை 1998ம் ஆண்டில் பிறந்தது. இப்போது இரண்டாவது குழந்தை சீனாவில் பீகிங் பல்கலைக்கழக மூன்றாவது மருத்துவமனையில் 2006 ஜனவரி 26 அன்று பிறந்திருக்கிறது.

மூன்று உறைவிப்பு நுட்பம் என்றால் என்ன?ஒரு பெண் தனது கருமுட்டைகளை உறைநிலையில் வைத்துவிட்டு, பின்னொரு நாளில் தனக்கு வசதிப்படும் போது, கருத்தரிக்கலாம். இதே போல, கருவும், ஆணின் விந்தணுவும் உறைநிலையில் வைக்கப்பட்டு, சோதனைக் குழாயில் அவை கலக்கப்பட்டு, குழந்தை பிறக்கிறது.

அப்படியானால், ரத்த வங்கி, கண் வங்கி போல கருமுட்டை வங்கி ஒன்றும் ஏற்படுத்தி விடலாமே என்று நினைக்கிறீர்களா?இது பற்றிக் கேட்ட போது அது பொறுப்பற்ற செயல் என்றார் பல்கலை மூன்றாவது மருத்துவமனையின் இனப்பெருக்க ஆய்வுப் பரிவின் இயக்குநர் ச்சியாவ்சியே. இவ்வாறு உறைவிக்கப்படுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இந்தத் துறையில் இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது.

செயற்கைக் கருத்தரிப்பு நுட்பம் எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்ற விவரத்தைத் தெரிந்து கொள்வேரமா?உலகின் முதலாவது சோதனைக்குழாய் குழந்தைக்கு இப்போது 27 வயதாகி விட்டது. சீனாவின் முதலாவது சோதனைக் குழாய் குழந்தைக்கு இப்போது 18 வயதாகிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் செயற்கைக் கருத்தரிப்பு நுட்பத்தில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டு விட்டன.

முதன்முதலில், ஒரு தட்டில் கருமுட்டைகளையும், ஆணின் விந்தணுக்களையும் மொத்தமாக வைத்து கருத்தரிக்கச் செய்தனர்.

பின்னர், ஒரு கருமுட்டையையும் ஆணின் ஒரு விந்தணுவையும் தனியேபிரித்து உறைவித்து கருத்தரிக்கச் செய்தனர். இதில் உறைவிக்கப்பட்ட கருமுட்டைக்குள், ஆணின் விந்தணு ஊசி மூலம், செலுத்தப்பட்டு, கரு உண்டாக்கப்படுகிறது.

அதன் பிறகு, புரட்சிகரமான மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. அதாவது செயற்கை முறையில் சோதனைக் குழாயில் உருவாக்கப்பட்ட கருவை பெண்ணின் கருப்பைக்குள் வைப்பதற்கு முன்னால், அந்தக் கரு மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மரபணு நோய் உள்ள தம்பதிகளுக்கு உருவாக்கப்படும். செயற்கைக் கருவில் ஏதேனும் மரபணுக் கோளாறுகள் உள்ளனவா என்று கண்டறிந்து தவிர்ப்பதற்கு இந்த நுட்பம் உதவுகிறது.