• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-29 20:48:10    
கூரியர் சேவை வளர்ச்சி

cri
கடந்த ஆண்டு முதல், சர்வதேச புகழ்பெற்ற கூரியர் சேவை தொழில் நிறுவனங்கள், சீனாவில் முதலீடு மற்றும் தொடரமைப்பு கட்டுமானத்தை வலுப்படுத்தி, இச்சுற்றுப் போட்டியில் முன் வாய்ப்பு கிடைக்க பாடுபட்டு வருகின்றன. குறுகியக்காலத்தில் பார்த்தால், சீனாவிலுள்ள பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், இந்த வெளிநாட்டு கூரியர் சேவை நிறுவனங்களின் முக்கிய வாடிக்கையாளராக இருக்கின்றன. உள்நாட்டு கூரியர் சேவையில் ஈடுபடும் சீனக் கூரியர் சேவை நிறுவனங்களுக்கு மாபெரும் பாதிப்பு ஏற்படாது. ஆனால், சேவையின் கருத்து, வழிமுறை, வரையறை, அளவு முதலியவற்றில், சீனாவின் கூரியர் சேவை நிறுவனங்கள் முழுமையாக உயர்வடையாமல் இருந்தால், அவை எதிர் நோக்கும் சந்தை நிர்பந்தமும் அறைகூவலும் மென்மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இது பற்றி, சீன சர்வதேச சரக்கு போக்குவரத்து சங்கத்தின் கூரியர் சேவை கமிட்டி தலைமை செயலாளர் லீயு ஜியான் சின் குறிப்பிடுகையில், சீனக்கூரியர் சேவை நிறுவனங்கள் தனது வளர்ச்சியில் இன்னும் நம்பிக்கை இழக்க வில்லை. போட்டியில் அவற்றுக்கு மேம்பாடுகள் உண்டு என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:

சீனாவின் சந்தை, சீன மக்களின் வழக்கம், கருத்துகள், மனித உறவு ஆகியவற்றை சீனத்தொழில் நிறுவனங்கள் நன்றாக அறிந்துகொண்டன. இதனால், அவற்றுடன் ஒத்துழைப்பைக் மேற்கொள்வதை சீன வாடிக்கையாளர்கள் மேலும் எளிதாக அங்கீகரிப்பார்கள் என்றார் லீயு ஜியான் சின்.

சர்வதேச கூரியர் சேவை பெரிய நிறுவனங்கள், நீண்ட வரலாற்றையும், அதிகமான நிதியையும் முன்னேறிய நிர்வாகத்தையும் கொண்டுள்ள போதிலும், சீனத்தொழில் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளின் வேகமான வளர்ச்சியினால், தமது தனிச்சிறப்புடைய மேம்பாட்டை கொள்கின்றன. உள்நாட்டு கூரியர் சேவை, வட்டார கூரியர் சேவை, நகரத்துக்குள்ளான கூரியர் சேவை ஆகியவற்றில் சீனத்தொழில் நிறுவனங்களுக்கு வலுவான போட்டியாற்றல் உண்டு.

சேவை வகைகளை அதிகரித்து, சேவை அளவை விரிவாக்கி, சந்தையில் பங்குவீதத்தையும் போட்டியாற்றலையும் உயர்த்தும் பொருட்டு, உள்நாட்டின் கூரியர் சேவை நிறுவனங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, முலவளத்தைத் திரட்டி, சீர்திருத்தி, நெடுநோக்கு கூட்டணியை நிறுவ வேண்டும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கிடையிலான போட்டி, சீனக்கூரியர் சேவையின் தரத்தை உயர்த்துவதற்குத் துணைபுரியும் என்று லீயு ஜியான் சின் கூறினார்.

போட்டியில் எதிராளியின் நிலை உயர்வாக இருந்தால், முழு போட்டியின் நிலையும் உயர்த்தப்படும். மேலும் உயர்வான வரையறையை நோக்கி, மேலும் நல்ல சேவையை வழங்க அனைவரும் பாடுபடுவர். இதன் மூலம், சேவை மனப்பான்மை, சேவைக்கருத்து, சேவை தரம், நிலை முதலியவை உயரும் என்றார் அவர்.