
வட சீனாவில் அமைந்துள்ள டியான்ஜின் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன், துறைமுகமாகத் திகழ்ந்தது. நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த கப்பல்கள் அங்கு போய்வந்தன. 600 ஆண்டுகளுக்கு முன் அது நகராக மாறியது. இந்நகரின் பழைய நகரப்பகுதி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.

இது, இந்நகரின் பழக்க வழக்கத்தின் தோற்றுவாயாகும். அண்மைக் கால தியென்ஜின் மாநகரின் அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு மையமும் ஆகும். தியென்ஜின் மாநகரின் குலோ எனும் இடம், இந்நகரின் சின்னமாகும். தொன்மை வாய்ந்த சின்னமும் ஆகும். வேறுபட்ட பாணிகளில் கட்டியமைக்கப்பட்ட ஆயிரமாயிரம் கட்டடங்கள், சென்து வீதி, சான்தெ வீதி ஆகிய 5 முக்கிய வீதிகளில் அமைந்துள்ளன.

5 முக்கிய வீதிகள் இடம்பெறும் காட்சித் தளத்தில் ஐரோப்பிய பாணியிலான 230 கட்டடங்கள் உள்ளன. இது, சீனாவின் கடந்த கால 100 ஆண்டு வரலாற்றைப் பிரதிபலிக்கும் சுற்றுலா நெறியாகும். இது, உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் தனிச் சிறப்பியல்பு வாய்ந்த ஈர்ப்புத் தன்மையுடையது என்று கூறலாம்.
|