• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-30 11:29:41    
பாருக்குள்ளே நல்ல பார்

cri
பாருக்குப் (Bar) போனால் பீர்குடிக்கலாம். பெய்ச்சிங் நகரின் சான்லி துன் பகுதியில் பார் ஸ் டிரீட் என்று ஒரு பெரிய தெருவே இருக்கிறது. இந்தியன் கிச்சனை ஒட்டினாற்போல் உள்ள இந்தத் தெருவின் இருமருங்கிலும் ஏராளமான பார்கள். பார்கள் நிறைய பீர்கள். பார்களுக்கு வெளியே வரிசையாக பீர் குடிக்க வந்தவர்களின் கார்கள்.

ஆனால் சீனாவின் ஜியாங்சு மாநிலத் தலை நகரான நான் ஜிங் நகரில் ஒரு புதுமையான பார் இருக்கிறது. இந்த பாருக்குப் போனால் நீங்கள் குடிக்க முடியாது. ஆழலாம். என்ன ஆச்சிரியமாக இருக்கிறதா? உங்களை அழவைப்பதற்காகவே இந்த பார் நடத்துகிறார் லுவோ ஜுன் (Luo Jon). இந்த பாரின் பெயர் மெர்ரி எவ்ரிடே, கிளரயிங் பார். இதை தமிழில் தினமும் அழுது ஆனந்தம் அடையும் பார் என்று சொல்லலாம்.

ஆமாம்! நாம் எதற்காக அழுகிறோம்? சின்னப் பிள்ளைகள் அழுதால் மிட்டாய் கிடைக்கும். சில சமயங்களில் அடியும் கிடைக்கும். வாலிப வயதில் அழுதால் காதல் கிடைக்கும். ஆமாம். அழாத காதலர்களே இல்லை எனலாம். கொஞ்சம் வயது முற்றி விட்டால் கடவுளை நினைத்து கண்ணீர் விடுகிறோம். 'அழுதால் உன்னைப் பெறலாமே' என்று மாணிக்கவாசகர் கூறவில்லையா? எது எப்படியோ, அழுதால் நமது மனச்சுமை குறைகிறது. மனப்பாரத்தை இறக்கி வைக்க உதவுவதான் இந்த பார் நடத்துவதன் நோக்கம்.

இந்த சின்னஞ்சிறிய பாரின் பரப்பளவு 9 சதுர மீட்டர். இரண்டு மேஜைகள், நாற்காலிகள், ஒரு சோபா. ஒரு மேஜையில் உங்களுக்கு அழுகையை வரவழைப்பதற்காக மிளகுச்சாறும், வெங்காயமும், சில கண்ணாடித் தம்ளர்களும் வைக்கப்பட்டுள்ளன. பாருக்குள் நுழைந்து, ஒரு தம்ளர் மிளகுச்சாலு குடித்து விட்டு, கண்களில் வெங்காயத்தைப் பிழிந்து, கண்ணீர் விட்டு கதறி அழுது, புலம்பி, உங்கள் மனச்சுமையை இறச்சி வைக்கலாம். இதற்குக் கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு 50 யுவான்-அதாவது சுமார் 275 ரூபாய்.

இவ்வளவு பணம் கொடுத்து அழுவதற்கு வாடிக்கையாளர்கள் வருகிறார்களா? 2004, ஜுலை மாதம் இந்த பார் தொடங்கப்பட்டதில் இருந்து சமீப் காலம் வரை ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வந்து அழுது தீர்த்திருக்கிறார்கள். "வேதனைப்பட்ட ஆத்மாக்கள் இங்கு வந்து, இந்த அமைதியான சூழலில், வாய்விட்டு அழுது, மனநிம்மதி பெற முடிகிறது," என்கிறார் பார் உரிமையாளர் லுவோ ஜுன், முதலில் இவர் ஒரு திருமண புரோக்கராகத்தான் இருந்தார். மணமகனுக்கும், மணமகளுக்கும் முடிச்சுப்போடும் தொழில் செய்த போது, பல உடைந்த உள்ளங்களை சந்தித்தார். அப்போது தான், இப்படியொரு தொழில் தொடங்கலாமே என்று தோன்றியது இவருக்கு.